»   »  கடவுள் அருள் பெற்றவர் எஸ்பிபி! - கேஜே ஜேசுதாஸ்

கடவுள் அருள் பெற்றவர் எஸ்பிபி! - கேஜே ஜேசுதாஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கடவுள் அருள் பெற்றவர் எஸ்பிபி என்று மூத்த பாடகர் கேஜே ஜேசுதாஸ் கூறினார்.

பல மொழிகளிலும் பல ஆயிரம் பாடல்களைப் பாடியுள்ள எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு, இசை உலகில் இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகிறது.

KJ Jesudas wishes SPB

இதையொட்டி, தான் குருவாக மதிக்கும் கேஜே ஜேசுதாஸ் - பிரபா தம்பதிகளுக்கு நேற்று பாதபூஜை நடத்தினார் எஸ்பிபி. நிகழ்ச்சியில் ஜேசுதாஸ் பேசுகையில், "ஒரு தாயின் வயிற்றில் பிறக்கவில்லை என்றாலும், நானும் எஸ்.பி.பி.யும் சகோதரர்கள் போன்றவர்கள். என் மீது மாறாத பாசமும், பரிவும் கொண்டவர் எஸ்.பி.பி.

KJ Jesudas wishes SPB

ஒரு வெளிநாட்டு பயணத்தின்போது எஸ்.பி.பி. என் பசியாற்றிய சம்பவத்தை என்னால் மறக்கவே முடியாது. எஸ்.பி.பி. என்றதும் உடனே எனக்கு அச்சம்பவம்தான் நினைவுக்கு வரும்.

KJ Jesudas wishes SPB

எஸ்.பி.பி. கடவுளின் அருளை பெற்றவர். அவர் மேன்மேலும் சாதனைகள் புரிய வேண்டும்," என்றார்.

English summary
KJ Jesudas has wished playback singer SP Balasubramaniyam on his Golden Jubilee celebration.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil