80 வது பிறந்த நாள்... கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் பாடகர் யேசுதாஸ் வழிபாடு
சென்னை: தனது 80 வது பிறந்த தினத்தை முன்னிட்டு பிரபல பாடகர் கே.ஜே.யேசுதாஸ் கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் இன்று வழிபட்டார்.
பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸ். மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, மராத்தி, பஞ்சாபி, ஆங்கிலம் என பல்வேறு மொழிகளில் 40,000-க்கும் அதிகமான பாடல்களை பாடி சாதனை படைத்தவர்.
சிறந்த பாடலுக்காக எட்டு முறை தேசிய விருது பெற்றிருக்கிறார் இவர். திரையுலகில், 1960-ஆம் வருடம் தனது இசைப்பயணத்தை தொடங்கிய யேசுதாஸ் பத்மவிபூஷண், பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகளை பெற்றிருக்கிறார். சபரிமலையில் இன்றும், அத்தாழ பூஜையில் ஒலிக்கும் ஹரிவராசனம் இவர் பாடியதுதான்.

வாழ்த்துகள்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்றும், அத்தாழ பூஜையில் ஒலிக்கும் ஹரிவராசனம் இவர் பாடியதுதான். இவரது 80 வது பிறந்த நாளை முன்னிட்டு பல பின்னணி பாடகர்களும் ரசிகர்களும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

கொல்லூர்
சமூக வலைத்தளங்களிலும் அவருக்கு வாழ்த்துகள் குவிந்துவருகிறது. இந்நிலையில், யேசுதாஸ் தனது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று காலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

பாடல் பாடுவார்
ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் குடும்பத்துடன் இந்த கோயிலுக்குச் சென்று வழிபடுவதை வழக்கமாக வைத்திருக்கும் யேசுதாஸ், அங்கு பாடல் பாடவும் செய்வார்.

பாடகர்கள்
அதன்படி இந்த பிறந்த நாளுக்கும் அங்கு சென்றார். அவர் வருவதை அறிந்த ஏராளமான ரசிகர்களும் பாடகர்களும் அங்கு கூடி வாழ்த்து தெரிவித்தனர். அவருடன் மனைவி பிரபா, மகன்கள் வினோத், விஜய் யேசுதாஸ், விஷால் ஆகியோரும் சென்றிருந்தனர்.


Click it and Unblock the Notifications











