டாக்டர் பஞ்சாயத்து.. கேஜேஆர் ஸ்டூடியோஸ் பரபரப்பு அறிக்கை.. மெளனம் கலைப்பாரா சிவகார்த்திகேயன்?

சென்னை: சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் மார்ச் 26ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால், தேர்தல் காரணமாக படத்தின் ரிலீசை தள்ளிப் போடுகிறோம் என படக்குழு கடைசி நேரத்தில் பரபரப்பு அறிக்கை வெளியிட்டது.

தற்போது படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்வதா? அல்லது ஒடிடியில் ரிலீஸ் செய்வதா என்கிற சர்ச்சை கிளம்ப படக்குழு மத்தியிலும் விரிசல் விழுந்துள்ளதாம்.

சிவகார்த்திகேயனின் டாக்டர்

சிவகார்த்திகேயனின் டாக்டர்

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள படம் டாக்டர். அனிருத் இசையில் வெளியான பாடல்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளன. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் தமிழில் அறிமுகமாகிறார். யோகி பாபு, பிக் பாஸ் அர்ச்சனா உள்ளிட்ட நடிகர்களும் நடித்துள்ளனர்.

தள்ளிப்போன ரிலீஸ்

தள்ளிப்போன ரிலீஸ்

மார்ச் 26ம் தேதி சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், கடைசி நேரத்தில் தேர்தல் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப் போடப்படுகிறது என படக்குழு அறிவித்தது. மேலும், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மே 13ம் தேதி படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது.

கொரோனா பரவல்

கொரோனா பரவல்

தேர்தல் முடிந்த கையோடு ஆரம்பித்த கொரோனா பரவல் பாதிப்பு காரணமாக அனைத்து தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளன. ஏப்ரல் 2ம் தேதி வெளியான சுல்தான் மற்றும் ஏப்ரல் 9ம் தேதி வெளியான கர்ணன் உள்ளிட்ட படங்கள் கிட்டத்தட்ட தப்பித்து விட்டன. ஆனால், டாக்டர் படம் ரிலீஸ் செய்ய முடியாமல் மாட்டிக் கொண்டது.

பஞ்சாயத்து

பஞ்சாயத்து

திரையரங்குகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில், முழுதும் ரெடியாகி உள்ள டாக்டர் படத்தை ஒடிடியில் வெளியிடலாமா? என்கிற பேச்சு எழுந்த நிலையில், படக்குழு மத்தியில் பஞ்சாயத்து ஏற்பட்டுள்ளது. தியேட்டரில் தான் வெளியிட வேண்டும் என்றும், ஒடிடியில் வெளியிடலாம் என்றும் இரு வேறு கருத்துக்கள் பரவியதால் ஏகப்பட்ட பிரச்சனைகள் எழுந்துள்ளன.

இயக்குநர் பிசி

இயக்குநர் பிசி

தளபதி 65 படத்தின் வாய்ப்பு கிடைத்த நிலையில், டாக்டர் படத்தை அப்படியே விட்டுவிட்டு இயக்குநர் நெல்சன் ஜார்ஜியாவுக்கு ஷூட்டிங் கிளம்பி விட்டார். இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு சென்னையிலேயே பெரிய மால் செட் ஒன்றையும் போட்டு வந்த இயக்குநருக்கு தளபதி விஜய் தரப்பில் இருந்து எல்லாவற்றையும் நிறுத்த சொல்லி உத்தரவு வந்துள்ளது.

அன்ஃபாலோ

அன்ஃபாலோ

இந்நிலையில், தற்போது டாக்டர் படக்குழுவினர் ஒருவரை ஒருவர் ட்விட்டரில் அன்ஃபாலோ செய்து வருகின்றனர் என்கிற பரபரப்பு தகவல் ஒன்றும் வந்துள்ளது. படத்தை ஒடிடியில் வெளியிட வேண்டாம் என தியேட்டர்கள் திறக்கும் வரை காத்திருப்போம் என எழுந்த முடிவால் தான் இந்த அன்ஃபாலோ சண்டை என்றும் கோலிவுட்டில் பேசிக் கொள்கின்றனர்.

கேஜேஆர் அறிக்கை

கேஜேஆர் அறிக்கை

டாக்டர் படத்தை சிவகார்த்திகேயன் தனது சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டூடியோஸ் உடன் இணைந்து உருவாக்கி உள்ளார். இந்நிலையில், சிவகார்த்திகேயன் தரப்பில் இருந்து அறிவிப்பு ஏதும் வராத சூழலில் கேஜேஆர் நிறுவனம் கொரோனா பரவல் சூழ்நிலையில், டாக்டர் படத்தின் ரிலீஸ் பற்றிய பேச்சுக்கே இடம் இல்லை என்று பரபரப்பு அறிக்கை ஒன்றும் தற்போது வெளியாகி உள்ளது.

சிவகார்த்திகேயன் மெளனம்

சிவகார்த்திகேயன் மெளனம்

கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படியொரு அறிக்கையை வெளியிட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை நடிகர் சிவகார்த்திகேயன் எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடாமல் மெளனம் காத்து வருகிறார். விரைவிலேயே டாக்டர் படம் தொடர்பாக உருவான பிரச்சனை குறித்து விளக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. டிக் டாக் மட்டும் அல்ல தியேட்டர்களும் பேன் ஆகிடுச்சே!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X