Radha Ravi: நயன்தாராவை கொச்சைப்படுத்திய ராதாரவி: அதிரடி முடிவு எடுத்த பிரபல தயாரிப்பு நிறுவனம்

By Siva

Recommended Video

Radha Ravi Insults Nayanthara : நயன்தாராவை அசிங்கப்படுத்திய ராதாரவி-வீடியோ

சென்னை: நயன்தாரா மற்றும் பொள்ளாச்சி சம்பவம் குறித்து கேவமலாக பேசிய ராதாரவியை இனி தங்களின் படங்களில் நடிக்க வைக்கப் போவது இல்லை என்று கேஜேஆர் ஸ்டியோஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் பயங்கரம் பற்றியும் நயன்தாரா பற்றியும் நடிகர் ராதாரவி கேவலமாக விமர்சித்தார். அவருக்கு நடிகைகள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டுடியோஸ் ராதாரவியை இனி தங்களின் படங்களில் நடிக்க வைப்பது இல்லை என்று அறிவித்துள்ளது.

இது குறித்து அது கூறியிருப்பதாவது,

ட்ரெய்லர்

ட்ரெய்லர்

மரியாதைக்குரிய நடிகர் ஒருவர் எந்த நடிகையின் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு சென்றாரோ அந்த நடிகையை பற்றியே மேடையில் அசிங்கமாக பேசியுள்ளார். அது அந்த நடிகையின் படத்தை கொண்டாட நடந்த விழா. அங்கிருந்தவர்கள் அவர் பேசியதை கேட்டு சிரித்து, கைதட்டியுள்ளனர்.

பதவி

பதவி

சீனியர்களுக்கு மரியாதை கொடுக்கிறோம் என்றும், அவர்களின் பதவிக்கு பயந்தும் நாம் இப்படி நடப்பது வேதனை அளிக்கிறது. மிஸ்டர் ராதாரவி பாரம்பரியமான குடும்பத்தில் இருந்து வந்தவர். டியர் சார், மரியாதை பெயரில் இருந்து வராது, உங்களின் வார்த்தைகள், செயல்களில் இருந்தே வர வேண்டும். கைதட்டல் பெற ஏதாவது பேச, செய்ய வேண்டும் என்றால் அதற்கு பல இடங்கள் உள்ளன, அவை உங்களுக்கு நன்றாகவே தெரியும்.

ராதாரவி

ராதாரவி

பெண்களுக்கு எதிரான மற்றும் ஈகோ பிடித்த மற்றும் ஒருவரை தமிழ் சினிமாவில் இருந்து ஒதுக்குவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இது பேச வேண்டிய நேரம். நயன்தாரா மற்றும் பொள்ளாச்சி பற்றி ராதாரவி பேசியது சரி அல்ல. அவருக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய நேரம் இது. இதனால் ஏதாவது மாறுமா என்று கவலைப்படாமல் குரல் கொடுக்கவும். சரியானவர்களின் காதில் விழும் வரை குரல் கொடுக்கவும். அதிகாரத்தில் உள்ளவர்கள் கேட்கட்டும்.

திரையுலகம்

நடிகர் சங்கம் இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறது என்று நம்புகிறோம். நாங்கள் ராதாரவிக்கு கண்டனம் தெரிவிப்பதுடன் அவரை இனி எங்கள் படங்களில் நடிக்க வைக்க மாட்டோம். மேலும் திரையுலகில் உள்ள மற்றவர்களும் அவரை ஒப்பந்தம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். அவருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறோம். நம் பெண்களை நாம் ஆதரிக்கவில்லை என்றால் யார் ஆதரிப்பார்கள்? என்று கேஜேஆர் ஸ்டுடியோஸ் கேள்வி எழுப்பியுள்ளது. வரும் வியாழக்கிழமை ரிலீஸாகும் நயன்தாராவின் ஐரா படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X