Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தமிழில் வெளியாகும் தபாங் 3: பாலிவுட்டில் கால் பதிக்கும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ்
மும்பை: தமிழின் முன்னணி தாயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமாக வளர்ந்து வரும் கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ், தற்போது பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான் கானின் தபாங் 3 படத்தின் விநியோக உரிமையை பெற்றுள்ளது. தபாங் படத்திற்கு தமிழகத்திலும் மிகுந்த வரவேற்பு உள்ளதால் தபாங் 3 படத்தினை தமிழிலும் டப் செய்து வெளியிடும் திட்டத்தில் உள்ளதாக கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில் அடுத்தடுத்து விநியோகத்தில் வெற்றிக்கொடி நாட்டி தயாரிப்பு துறையிலும் கலக்கி வரும் கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம், இந்த வருடத்தில் இன்னும் பல ஆச்சர்யகரமான திரைப்படங்களுடன் வெற்றி நடை போட காத்திருக்கிறது. கோலிவுட்டுக்கு அடுத்து தற்போது பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளது.
கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் நடிப்பில் உருவாகி வரும் தபாங் 3 படத்தினை தமிழகத்தில் அனைத்து மொழிகளிலும் வெளியிடும் உரிமையை அதிகாரப்பூர்வமாக பெற்றுள்ளது.
இந்த சந்தோஷ தருணத்தில் கொட்டாபாடி ராஜேஷ், கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் தெரிவித்துள்ளதாவது.
இது கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்திற்கு அதன் பயணத்தில் மிகப்பெரிய மைல்கல். இந்த தருணம் மிகவும் பெருமையும் சந்தோஷமும் தரும் தருணம். இனி கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் மேலும் கவனமுடனும், நேர்த்தியுடனும் உலக சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் அவர்கள் விரும்பும் தயாரிப்பையும், விநியோகத்தையும் தேர்ந்தெடுத்த படங்கள் மூலம் தமிழகத்திற்கு தரும் என்றார்.
இன்று பிறந்தநாள் காணும் இயக்குநர் இமயம்.. வாழ்த்து சொல்லும் கென்னடி கிளப் படக்குழு!
மேலும் தனிப்பட்ட வகையில் நான் தபாங் படத்தொடரின் தீவிர ரசிகன். தபாங் படத்தொடர் அடித்தட்டு ரசிகன் முதல் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் ஆக்சன், காமெடி, செண்டிமெண்ட், ரொமான்ஸ் என அனைத்தையும் தன்னகத்தே கொண்டது. தபாங் படத்திற்கு தமிழகத்திலும் மிகுந்த வரவேற்பு உள்ளதால் தபாங் 3 படத்தினை தமிழிலும் டப் செய்து வெளியிடும் திட்டத்தில் உள்ளோம்.
இப்படம் அறிவிக்கப்பட்டபோதே வெற்றி நிச்சயமாகிவிட்டது. மேலும் இதில் சல்மான்கானுடன் மீண்டும் நடனப்புயல் பிரபு தேவா இயக்குநராக இணைந்தவுடன் இப்படத்தின் வெற்றி 200 சதவிகிதம் உறுதியாகிவிட்டது. இந்த தபாங் குடுமபத்தில் இணைந்ததற்கு சல்மான் கான், அர்பாஸ் கான், ஆதித்யா சௌஷி, பிரபுதேவா மற்றும் இக்குடும்பத்தில் உள்ள இப்படத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
தபாங் 3 திரைப்படம் வரும் டிசம்பர் 20 தேதி வெளியாகிறது. தபாங் படத்தில் நடித்த அதே நடிகர்கள் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளார்கள். சோனாக்ஷி சின்ஹா, பிரகாஷ் ராஜ், அர்பாஸ்கான், மாஹி கில் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்தில் புதியதொரு வேடத்தில் நான் ஈ புகழ் கிச்சா சுதீப் நடித்துள்ளார்.
இப்படத்தை இயக்குவது நடனப்புயல் பிரபு தேவா. கதை மற்றும் திரைக்கதை அமைப்பு திலீப் சுக்லா. இசையமைத்திருப்பது இரட்டையர்களான சஜீத் வஜீத். ஒளிப்பதிவு சன்ஞித் ஷிரோத்கர், மகேஷ் லிமாயா. இப்படத்தை தயாரித்திருப்பது சல்மான்கான், அர்ஃபாஸ் கான், நிகில் திவேதி. தயாரிப்பு நிறுவனம் அர்ஃபாஸ் கான் புரொடக்சன்ஸ் மற்றும் ஸஃபரூன் பிராட்காஸ்ட்.
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?