ஹீரோ டிரைலர் வெளியீட்டு விழாவில் விஜய் ரசிகர்களை சீண்டிய கோட்டபாடி ராஜேஷ்?
சென்னை: ஹீரோ டிரைலர் வெளியீட்டு விழா இன்று காலை சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
கோட்டபாடி ஜே. ராஜேஷின் கேஜேஆர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஹீரோ படம் உருவாகியுள்ளது.
தற்போது வெளியான ஹீரோ டிரைலரின் காட்சிகள் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு கூஸ் பம்ப்ஸ் கொடுத்து வருகிறது.
ஹீரோ படத்தின் பாடல்கள் பெரிதும் எடுபடாத நிலையில், டிரைலரில் யுவன் இசையமைத்துள்ள பின்னணி இசை வெறித்தனமாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
கெத்தா சொல்லலாம்
பிளே ஹீரோ கேமை விளையாடி முதல் பரிசு பெற்ற சிவகார்த்திகேயனின் ரசிகர் கோகுலை வைத்து புது விதமாக ஹீரோ படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. அதன் பின்னர் பேசிய சிவகார்த்திகேயன், ஹீரோ படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் சிவகார்த்திகேயன் தரமான படத்தில் நடித்துள்ளார் என கெத்தாக பெருமையுடன் சொல்லலாம் என பேசியுள்ளார்.
கலெக்ஷன் சொல்லுவோம்
ஹீரோ டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய கோட்டபாடி ஜே. ராஜேஷ், தல ரசிகர்களுக்கு விஸ்வாசம் எப்படியோ அந்த அளவுக்கு சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஹீரோ இருக்கும் என பேசிய ராஜேஷ், படத்தின் வெளியீட்டிற்கு பிறகும் படத்தின் கலெக்ஷன் குறித்த அப்டேட்களை தொடர்ந்து பத்து நாட்களும் வெளியிடுவேன் என்றும் கூறியுள்ளார்.
விஜய் ரசிகர்கள் கோபம்
ராஜேஷ் பேசிய இந்த பேச்சு குறித்த தகவல் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை அறிந்த விஜய் ரசிகர்கள் பிகில் படத்தின் கலெக்ஷன் குறித்து அர்ச்சனா கல்பாத்தி அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்பதை ராஜேஷ் மறைமுகமாக சீண்டியுள்ளார் என கோபம் கொண்டு அதனை கலாய்த்து ட்வீட் போட்டு வருகின்றனர்.
10 நாள்ல 200 கோடி
கேஜேஆர் ஸ்டூடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ் பேசியது குறித்து அறிந்த விஜய் ரசிகர்கள் தொடர்ந்து ட்ரோல் செய்யத் தொடங்கியுள்ளனர். இந்த வாட்டி தமிழ்நாட்டில் படம் வெளியான 10 நாட்களில் 200 கோடி வசூல் என புழுகப் போகிறார் என ட்வீட் போட்டு ட்விட்டர் சண்டையை துவங்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











