"டாக்டர் அப்டேட் தாடா ".. மரியாதை இல்லாமல் ரசிகர் ட்விட்.. தக்க பதிலடி கொடுத்த கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ்
சென்னை: டாக்டர் பட அப்டேட் கேட்டு மரியாதை இல்லாமல் ட்விட் செய்துள்ளார் சிவகார்த்திகேயனின் ரசிகர். இதனை பார்த்த கே. ஜே. ஆர் ஸ்டுடியோஸ் பதில் அடி கொடுத்துள்ளது .
சின்ன திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து பல வெற்றிகளை கண்டவர் தான் சிவகார்த்திகேயன். அவரின் பேச்சாலும் ,பல திறமைகளை கொண்டதாலும் சின்ன திரையில் இருக்கும் போதிலிருந்தே பல ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார்.
இதுவரை நடித்த அனைத்து படங்களுமே பெரும்பாலும் நல்ல பெயரையே பெற்று தந்தது. சில படங்கள் வருமான ரீதியாக சரியாக போகவில்லை என்றாலும், பொது மக்களிடையே நல்ல டாக் இருந்து வந்தது .

நல்ல வரவேற்பு கிடைத்தது
சிவகார்த்திகேயனின் அடுத்த படமான டாக்டர், மக்கள் இடையே மிகுந்த வரவேற்பை தூண்டியுள்ளது. இப்படத்தை இயக்குபவர் நெல்சன் திலிப் குமார், இவர் ஏற்கனவே நயன்தாராவை முக்கிய கதாபாத்திரமாக வைத்து கோலமாவு கோகிலா என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. டாக்டர் படமும் அந்த அளவிற்கு பேசப்படுமா என்ற எதிர் பார்ப்பு மக்களிடையே பெரும் அளவில் இருந்து கொண்டுதான் இருக்கின்றது.

டிக்கிலோனா
கார்த்திக் யோகி இயக்கி சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் படம்தான் டிக்கிலோனா, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது இதனை தொடர்ந்து செகண்ட் லுக், தேர்டு, புதன், வியாழன் வெள்ளி என்று தொடர்ந்து கே. ஜே. ஆர் ஸ்டுடியோஸ் ட்விட் செய்து. பல விதமாக புகைப்படங்களை வெளியிட்டு மக்களை ஈர்த்தது .

சந்தானத்தின் டிக்கிலோனாவா?
விஜய் டிவியில் இருந்து சினிமாவிற்கு வந்து பல வெற்றிகளை கொடுத்ததில் இவர்கள் இருவருக்கும் முக்கிய பங்கு உண்டு. காமெடி நடிகரான சந்தானம், ஹீரோவாக இருக்கும் சிவகார்த்திகேயன் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகின்றது. அதனால் டாக்டர் படம் வெற்றி பெருமா, டிக்கிலோனா வெற்றி பெருமா என்ற எதிர்பார்ப்பு பெரும் அளவு இருக்கின்றது.

அப்டேட்ஸ் கொடுங்கள்
சிவகார்த்திகேயனும், பிரியங்கா மோகனும் இணைந்து நடித்த இப்படத்தின் முதல் பார்வை வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தை பற்றி வேறு எந்த செய்தியும் இது வரை வெளியிடப் படவில்லை. ஆனாலும் இப்படம் சிவகார்த்திகேயனுக்கு நல்ல படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மக்கள் தரப்பில் இருந்து அப்டேட்ஸ் கொடுங்கள் என்று பல தரப்பில் கேட்டு கொண்டு இருகின்றனர்.

மரியாதை இல்லாமல்
டாக்டர் படத்தை பற்றி எந்த செய்தியும் வெளிவராததால் சிவாகார்த்திகேயன் ரசிகன் "டாக்டர் அப்டேட் தாடா "என்று ட்விட் போட்டதுடன், என்ன கொல்லாதீங்கடா என்று வடிவேலு சொல்லும் ஜிஃ ப் (gif)பைல்லையும் இணைத்துள்ளார். இதனை பார்த்த கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் "அப் டேட்ஸ் கேக்குறது ஈசி, கொடுக்கறது தான் கஷ்டம். சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் மற்றும் அயலான் படத்தின் போஸ்ட் ப்ரோட்டக்ஷன் வேலை துவங்க லாக்டவுன் முடிய காத்து கொண்டு இருக்கிறோம், லாக் டவுன் முடியட்டும் அப் டேட்ஸ் அள்ளும் என்றும் தெரிவித்து உள்ளது .
Recommended Video

இதுவரை ஹீரோ பாருங்க
லாக் டவுன் முடியும் வரைக்கும் பத்திரமாக வீட்டில் இருங்கள், என்றும் பிரைம் வீடியோவில் இருக்கும் சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ படத்தை பாருங்கள் என்றும் தெரிவித்து உள்ளது. மரியாதை இல்லாமல் ட்விட் செய்தாலும், அவருக்கு மரியாதையாக பதில் கொடுத்து உள்ளது ஜே.கே ஆர் ஸ்டுடியோஸ். இதனை பார்த்த பிறகாவது ரசிகர்கள் கொஞ்சம் மரியாதையாக பேசுங்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











