தடையும் உடையும்.. டிச.,20 ஹீரோ கன்ஃபார்ம் ரிலீசாகுமாம்!
Recommended Video
சென்னை: சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தயாரிப்பு நிறுவனமான கே.ஜே.ஆர்., ஸ்டூடியோஸ், நம்ம படத்துக்கு ஃப்ரீ புரமோஷன் ஆரம்பிச்சிட்டாங்க என்றும், தடைகளை தாண்டி நிச்சயம் டிசம்பர் 20ம் தேதி ஹீரோ திரைப்படம் வெளியாகும் என அழுத்தமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதேபோல, இயக்குநர் பி.எஸ். மித்ரன், ஹீரோ படத்தில் இடம்பெற்றுள்ள மால்டோ கித்தாப்புலே பாடலில் வரும் "தடையும் உடையும்" ஸ்க்ரீன் ஷாட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ஹீரோ
கே.ஜே.ஆர். ஸ்டூடியோ தயாரிப்பில் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்ஷன், அர்ஜுன், அபய் தியோல் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஹீரோ. நாடு முழுவதும் நடைபெறும் கல்வி ஊழலை சூப்பர் ஹீரோ கதையாக உருவாக்கியுள்ளார் மித்ரன். இந்த படம் வரும் டிசம்பர் 20ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

என்ன தடை
24 ஏஎம் பிலிம்சின் பங்குதாரர்களான ராஜா, பிரபு, ஜெயதேவி ஆகியோர் டி.எஸ். ஆர் பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கிளடட்ஸ் பேட்ரிக் ஹென்றி என்பவரிடம் இருந்து கடனாக பெற்ற 10 கோடி ரூபாயை திருப்பித் தரவில்லை என தொடரப்பட்ட வழக்கில் 24 ஏஎம் சார்பில் ஆரம்பிக்கப்பட்ட ஹீரோ படத்திற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

யார் தயாரிப்பாளர்
சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தை 24 ஏஎம் ஸ்டூடியோஸ் தான் முதலில் ஆரம்பித்தது. ஆனால், ஆர்.டி. ராஜாவுக்கு ஏற்பட்ட கடன் சுமையால், அந்த படத்தை தயாரிக்க முடியாமல் நிறுத்தி விட்டார். அந்த படத்தை, கே.ஜே.ஆர். நிறுவனம் தான் தயாரித்துள்ளது. மேலும், சிவகார்த்திகேயன் - ரவிக்குமார் கூட்டணியில் கிடப்பில் இருக்கும் சையின்ஸ் ஃபிக்ஷன் படத்தையும் கே.ஜே.ஆர். நிறுவனம் தயாரிக்க முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஃப்ரீ புரமோஷன்
பொதுவாக விஜய் படங்களுக்குத்தான் இதுபோன்ற ஃப்ரீ புரமோஷன்கள் வரும். ஆனால், தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ஹீரோ படத்திற்கு ஃப்ரீ புரமோஷன் கிடைத்துள்ளதற்கு நன்றி என தயாரிப்பு நிறுவனமான கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் தற்போது ஒரு தில்லான ட்வீட்டை போட்டுள்ளது.
கண்டிப்பா வரும்
அதுமட்டுமின்றி, கே.ஜே.ஆர். தயாரிப்பு நிறுவனத்தின் வழக்கறிஞர் கார்த்திகேயன் பாலா ஒரு நோட்டீஸ் வெளியிட்டுள்ளார். பலரது கடுமையான உழைப்பினால் உருவாகப்பட்டிருக்கும், சமூக கருத்துக்கள் நிறைந்திருக்கும் ஹீரோ படம் நிச்சயம் சொன்ன தேதியில் கண்டிப்பா வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











