கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்.. கண்டிப்பா மிஸ் பண்ணாதீங்க.. #KKKMassiveResponse!
சென்னை: என்னடா இது தமிழ் சினிமாவில் வார வாரம் ஒரு நல்ல படம் வரவில்லையே என ஏங்கும் ரசிகர்களுக்கு, நிச்சயம் துல்கர் சல்மானின் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ரொம்ப பிடிக்கும்.
ஒரு படம் நல்லா இருந்தா, அதற்கு பெரிய விளம்பரங்களே தேவையில்லை, செவி வழி செய்தியாகவே பலரையும் சேரும் என்பது நிச்சயம் இந்த படத்திற்கும் பொருந்தும்.
நேற்று வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

ப்ளூ சட்டை மாறன்
தமிழ் சினிமாவில் எடுக்கப்படும் அதிக பட்ஜெட் படங்களை கிழித்து தொங்கவிடும் ப்ளூ சட்டை மாறனிடம் இருந்து இப்படியொரு விமர்சனம் வரும் என கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமியே நினைத்திருக்க மாட்டார். அந்த அளவிற்கு மாறன் படத்தை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

கெளதமுக்கு பாராட்டு
கெளதம் மேனன் இயக்கத்தில் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை கழுவி கழுவி ஊற்றிய ப்ளூ சட்டை மாறன், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள கெளதம் மேனனின் நடிப்பை வாயாற புகழ்ந்துள்ளார்.
டிரெண்டாகுது
தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில், துல்கர் சல்மான், ரிது வர்மா, ரக்ஷன், நிரஞ்சனி ஆதித்தன் மற்றும் கெளதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் நேற்று வெளியான இந்த படத்தை பார்த்த ரசிகர்கள், தற்போது ட்விட்டரில் #KKKMassiveResponse என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி கொண்டாடி வருகின்றனர்.
யாரும் திருந்தல
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் ஆரம்பமான முதல் 20 நிமிடங்கள், படத்தை பார்த்த பலரும், என்னடா வழக்கமான லவ் ஸ்டோரியா என நினைத்து கடுப்பாக, கெளதம் மேனன் என்ட்ரியுடன் வரும் ட்விஸ்ட், படத்தை வேறு தளத்திற்கு கொண்டு செல்கிறது. நல்ல வேளை படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் யாரும் திருந்தல என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதுதான் மெசேஜ்
வழக்கமாக படங்களில் ஹீரோ மோசடி செய்கிறார், திருடுகிறார் என்றால் அதற்கு பின்னால் ஒரு பிளாஷ்பேக் இருக்கும், அந்த பணத்தை கொண்டு நல்ல காரியத்துக்கு செலவு செய்கிறார் என பில்டப் செய்யப்பட்டிருக்கும், இதுபோன்ற எந்தவொரு மெசேஜும் இந்த படத்தில் இல்லாதது தான் படத்தின் பலமே என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
பார்ட் 2 வேணும்
காதல் படம் என்று நினைத்து போனவர்களுக்கு, துல்கர் சல்மானும், ரக்ஷனும் செய்யும் ஆன்லைன் மோசடிகள் ட்விஸ்ட் கொடுக்க, அவ்வளவு தானா என நினைக்கும் ரசிகர்களுக்கு, நாயகி ரிது வர்மா மற்றும் அவரது தோழி நிரஞ்சனி ஆதித்தன் சேஞ்ச் ஓவர் ஆகும் இடம் படத்தை வேற லெவலுக்கு கொண்டு செல்கிறது. இரண்டாவது பாகத்துக்கும் ரசிகர்கள் இப்பவே வெயிட்டிங்!


Click it and Unblock the Notifications











