வாரிசு நடிகையை காதலிக்கும் கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல்?

By Siva

மும்பை: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் கே.எல். ராகுலுக்கும், வாரிசு நடிகைக்கும் காதல் என்று கூறப்படுகிறது.

கிரிக்கெட் வீரர் ஒருவரும், பாலிவுட் நடிகை ஒருவரும் காதலிப்பது புதிது அல்ல. ஷர்மிளா தாகூர் காலத்தில் இருந்து நடந்து கொண்டிருக்கிறது. நம்ம அனுஷ்கா சர்மா கூட கேப்டன் கோஹ்லியை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் கே. எல். ராகுலும், பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகளும், நடிகையுமான அதையா ஷெட்டியும் காதலிப்பதாக பேச்சு கிளம்பியுள்ளது.

KL Rahul, Athiya Shetty in love?

இது குறித்து ராகுல் மற்றும் அதையாவுக்கு தெரிந்த ஒருவர் தெரிவித்ததாவது,

ராகுலும், அதையாவும் ஒன்றாக ஊர் சுற்றுகிறார்கள். அவர்கள் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து டேட் செய்கிறார்கள். இருவரும் காதலில் ரொம்ப சீரியஸாக உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

பொதுவான நண்பர்கள் மூலம் ராகுலும், அதையாவும் சந்தித்தார்களாம். நட்பாக துவங்கிய பழக்கம் பின்னர் காதலாகிவிட்டதாம். பொது இடங்களுக்கு ஜோடியாக சென்றால் காதல் என்று பேச்சு கிளம்புவதை தவிர்க்க ராகுலும், அதையாவும் பலே ஐடியா போட்டுள்ளனர். அதாவது பொது இடங்களில் சேர்ந்து சுற்றுவது இல்லை என்பதே அந்த ஐடியா. அது ஒர்க்அவுட் ஆகிவிட்டது என்றே கூற வேண்டும்.

இருவருக்கும் பொதுவான தோழியான ஆகான்ஷா ரஞ்சனுடன் சேர்ந்து ராகுலும், அதையாவும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அது தவிர்த்து அவர்களின் புகைப்படத்தை யாரும் பார்த்தது இல்லை. அந்த புகைப்படத்தில் கூட ராகுல் தனது முகத்தை சரியாக காட்டாமல் நின்று கொண்டிருப்பார். காதல் பற்றி ராகுலும், அதையாவும் கருத்து தெரிவிக்க தயாராக இல்லையாம்.

முன்னதாக ராகுலும் நடிகை நிதி அகர்வாலும் காதலிப்பதாக பேசப்பட்டது. இது குறித்து நிதியிடம் கேட்டதற்கு, காதலா யார் சொன்னது, ராகுல் என் நல்ல நண்பர் மட்டுமே என்றார். இந்நிலையில் ராகுலின் பெயர் அதையாவுடன் அடிபடுகிறது. ராகுல், அதையா விவகாரம் குறித்து அறிந்த ரசிகர்களோ, அவர் உலகக் கோப்பை போட்டிகளில் நல்லபடியாக விளையாட வேண்டும், அதனால் அவரை தொந்தரவு செய்யாமல் இருங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

அண்மையில் தான் கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவும், நடிகை அனுபமா பரமேஸ்வரனும் காதலிப்பதாக பேச்சு கிளம்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X