அடக்கடவுளே.. சோஷியல் மீடியா போட்டியால் பரிதாபமாக உயிரிழந்த இளம் மாடல் அழகி.. யார் இந்த கிளாடியா?
லண்டன் சோஹோ பகுதியில் உள்ள ஒரு இரவு விடுதிக்கு வெளியே அதிகாலை 4:30 மணியளவில் கார் மோதி ஏற்பட்ட விபத்தில், பிரபல சமூக ஊடக இன்ஃப்ளுயன்சரும் இன்ஸ்டாகிராம் மாடலுமான கிளாடியா கிளாம் (Klaudia Glam) எனப்படும் கிளாடியா சாக்ரெவ்ஸ்கா (Klaudia Zakrzewska) உயிரிழந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நிகழ்ந்த இந்தத் துயரச் சம்பவம், மத்திய லண்டனை சோகத்தில் ஆழ்த்தியதுடன், பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கோர விபத்து சம்பவத்தின் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கிளாடியாவிற்கும் கேப்ரியல் கேரிங்டன் (Gabrielle Carrington) என்பவருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாய் தகராறு, பின்னர் கைகலப்பாக மாறியதை அந்த விடியோக்கள் காட்டுகின்றன. ஒரு "போட்டி சமூக ஊடக நட்சத்திரம்" ஓட்டி வந்த காரால் கிளாடியா மீது மோதப்பட்டதாக டோம லுக்ரலின் (Dom Lucre) ட்விட்டர் பதிவு தெரிவிக்கின்றது.

சம்பவம் உக்கிரமடைந்த நேரத்தில், "அவள் அவளை வண்டியை விட்டு ஏற்றிவிட்டாள்!" என்று ஒருவர் சத்தமிடும் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது. கருப்பு நிற மெர்சிடிஸ் கார் ஒன்று கிளாடியா மீது மோதி, இரண்டு வழிப்போக்கர்களையும் படுகாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த அதிர்ச்சியூட்டும் நிகழ்வு, இரவு விடுதிக்கு வெளியே திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது.
சோஹோவின் பிரபலமான இன்ஃகா இரவு விடுதிக்கு (Inca nightclub) வெளியே அதிகாலை நேரத்தில் இந்த கொடூர நிகழ்வு நடந்தது. அப்பகுதி அதன் தீவிரமான இரவு வாழ்க்கை மற்றும் அதிக மக்கள் நடமாட்டத்திற்காக அறியப்பட்டதாகும். விபத்து நடந்த உடனேயே அவசர சேவைப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர், ஆனால் துரதிர்ஷ்டவசமாக கிளாடியாவின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.
இந்த வழக்கில் 29 வயதான கேப்ரியல் கேரிங்டன் கைது செய்யப்பட்டுள்ளார் என காவல்துறை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. அவர் மீது கொலை முயற்சி, கடுமையான உடல் காயம் ஏற்படுத்துதல், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் போன்ற பல கடுமையான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கேப்ரியல் கேரிங்டன் காவல் துறையின் காவலில் உள்ளார்.
கிளாடியாவுக்கு ஏற்பட்ட காயங்கள் தவிர, 30 வயதுப் பெண் ஒருவரும், 50 வயது ஆண் ஒருவரும் இந்த விபத்தில் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களது நிலை குறித்த விரிவான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை, ஆனாலும் அவர்கள் விபத்தில் சிக்கியதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் குறித்து புலனாய்வாளர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதுடன், உதவக்கூடிய தகவல்களை அளிக்குமாறு சாட்சிகளை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications