நாகர்ஜுனாவுக்கு முதல் திருமணம் நடந்தபோது அமலா ஒரு சிறுமி தெரியுமா?

By Siva

சென்னை: நாகர்ஜுனாவுக்கு முதல் திருமணம் நடைபெற்றபோது நடிகை அமலாவுக்கு வெறும் 14 வயது தான் என்பது உங்களுக்கு தெரியுமா.

திரையுலக பிரபலங்கள் பலர் இரண்டாவது முறை திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். பிரபல நடிகைகள் நடிகர்களின் இரண்டாவது மனைவியாக உள்ளனர்.

நடிகர்களுக்கு முதல் திருமணம் நடந்தபோது அந்த நடிககைளில் பலர் சிறுமிகளாக இருந்துள்ளனர்.

அமலா

அமலா

நடிகர் நாகர்ஜுனாவுக்கு 1984ம் ஆண்டு லட்சுமி டகுபாட்டியுடன் திருமணம் நடந்தது. அப்பொழுது அவரின் இரண்டாவது மனைவியான நடிகை அமலாவுக்கு வயது 14 ஆகும். நாகர்ஜுனா, லட்சுமி தம்பதியின் மகன் தான் சமந்தாவின் கணவரும், நடிகருமான நாக சைதன்யா என்பது குறிப்பிடத்தக்கது.

சஞ்சய் தத்

சஞ்சய் தத்

பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு முதல் முறையாக 1987ம் ஆண்டு திருமணம் நடந்தது. அப்பொழுது அவருடைய மூன்றாவது மற்றும் தற்போதைய மனைவியான மான்யதாவுக்கு வெறும் 8 வயது தான். சஞ்சய் 1998ம் ஆண்டு ரியா பிள்ளையை திருமணம் செய்தார். அதன் பிறகே 2008ம் ஆண்டு மான்யதாவை மணந்தார். அவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

ஆமீர் கான்

ஆமீர் கான்

பாலிவுட் நடிகர் ஆமீர் கானுக்கும், ரீனா தத்தாவுக்கும் 1986ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அப்பொழுது அவரின் தற்போதைய மனைவி கிரண் ராவுக்கு 13 வயது தான். ஆமீர், கிரண் ராவுக்கு ஆசாத் என்ற மகன் உள்ளார். ஆமீருக்கு முதல் திருமணம் மூலம் ஜுனைத் என்கிற மகனும், ஐரா என்கிற மகளும் உள்ளார்கள்.

சயிப் அலி கான்

சயிப் அலி கான்

பாலிவுட் நடிகர் சயிப் அலி கான் தன்னை விட 12 வயது பெரியவரான நடிகை அம்ரிதா சிங்கை கடந்த 1991ம் ஆண்டு திருமணம் செய்தார். அப்பொழுது அவரின் தற்போதைய மனைவியான நடிகை கரீனா கபூருக்கு 11 வயது. சயிப், கரீனா தம்பதிக்கு தைமூர் அலி கான் என்கிற மகன் உள்ளார். சயிபுக்கு முதல் மனைவி மூலம் சாரா, இப்ராஹிம் ஆகிய இரண்டு பிள்ளைகள் உள்ளனர். சாரா அப்பா, அம்மா வழியில் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஹேமமாலினி

ஹேமமாலினி

பாலிவுட் நடிகர் தர்மேந்திராவுக்கும் பிரகாஷ் கவுருக்கும் 1954ம் ஆண்டு திருமணம் ஆனது. அப்பொழுது அவரின் தற்போதைய மனைவியான நடிகை ஹேமமாலினிக்கு 7 வயது தான். ஹேமமாலினி, தர்மேந்திரா தம்பதிக்கு இஷா, அஹானா என்று இரண்டு மகள்கள் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X