கோ 2 படத்தில்... அப்துல் கலாமின் 'உன்னை மாற்றினால்'!

By Manjula

சென்னை: ஆர்.எஸ்.இன்போடேயின்மென்ட் நிறுவனம் தற்போது ஒரே நேரத்தில் 3 படங்களைத் தயாரித்து வருகிறது, 3 படங்களிலும் நாயகனாக பாபி சிம்ஹா நடித்து வருகிறார். 3 படங்களில் கோ 2 படத்தின் சிங்கிள் டிராக் ஆகஸ்ட் 15 ம் தேதியில் வெளியாகிறது.

இந்தப் பாடலை மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அப்துல்கலாமின் வார்த்தைகளைக் கொண்டே, உருவாக்கியிருக்கிறார் பாடலாசிரியர் நா.முத்துக்குமார்.

Ko 2 Single Track Released on August 15

கோ 2 படத்தின் டைட்டில் பாடலாக உருவாகியிருக்கும் இந்தப் பாடல் உன்னை மாற்றினால் என்று தொடங்குகிறது, டைட்டில் பாடல் மட்டுமல்லாது முழுப் படத்திற்குமான பின்னணி இசையாகவும் இந்தப் பாடலின் இசையானது இடம்பெறுகிறது.

கோ 2 படத்திற்கு இசையமைத்து இருக்கிறார் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ். பாடகர் சிவராமகிருஷ்ணன் பாடியிருக்கும் இந்தப் பாடல் ஆகம் பேன்ட்(Agam Band) என்ற முறையில் இசையமைக்கப் பட்டிருக்கிறது.

பாபி சிம்ஹா, நிக்கி கல்ராணி மற்றும் பிரகாஷ் ராஜ் நடிப்பில் வளர்ந்து வரும் கோ 2 படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய இருக்கிறது.

படத்தில் இடம்பெறும் இந்தப் பாடலிற்கும் படத்திற்கும் துளியும் சம்பந்தமில்லை என்றாலும் அப்துல்கலாம் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்தப் பாடலை உருவாக்கி இருக்கின்றனர் இயக்குநர் சரத் உள்ளிட்ட படப்பிடிப்புக் குழுவினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X