நாளை முதல் கோச்சடையான் முன்பதிவு... அபிராமியில் மட்டும் முன்கூட்டியே தொடங்கியது!

By Shankar

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் படம் பல்வேறு தடங்கல்களுக்குப் பிறகு வரும் 23-ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது.

இதற்கான முன்பதிவு நாளை முதல் தொடங்குகிறது. அபிராமி மெகா மாலில் மட்டும் நேற்று முன்தினமே முன்பதிவு தொடங்கிவிட்டது.

ரஜினியின் கோச்சடையான் படம் கடந்த 9-ந்தேதி வெளிவர இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் ஏற்பட்ட 'தொழில்நுட்ப கோளாறு' காரணமாக படம் வெளியீடு வருகிற 23-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டதாக தயாரிப்பாளர்கள் அறிவித்தனர்.

2டி ரெடி, 3டி தாமதம்

இப்படம் 6 மொழிகளிலும் 2டி வடிவத்தில் தயாராகி ஏற்கனவே தணிக்கை சான்றிதழ் பெற்றுவிட்டது. இப்போது தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் 3டி வடிவத்தில் தயாரான படத்துக்கும் தணிக்கை செய்யப்பட்டு விட்டது. 23 - ந்தேதி படம் உறுதியாக வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முன்பதிவு

இதையடுத்து தியேட்டர்களில் டிக்கெட் முன்பதிவுகள் நாளை (18-ந்தேதி) துவங்குகிறது. சென்னையில் சத்யம், சாந்தம், செரீன், எஸ்கேப், ஐநாக்ஸ், தேவி, உட்லன்ட்ஸ், சாந்தி, ஆல்பட், அபிராமி, பி.வி.ஆர். பெரம்பூர், எஸ் 2, ஏ.வி.எம். ராஜேஸ்வரி, உதயம் சூரியன், சந்திரன், சைதை ராஜ், மகாராணி, ஐட்ரீம், பாரத், வேளச்சேரி லக்ஸ், மாயாஜால் உள்ளிட்ட 50 அரங்குகளில் திரையிடப்படுகிறது.

6000 அரங்குகள்

தமிழ்நாட்டில் மட்டும் 500 தியேட்டர்களுக்கு மேல் திரையிடப்படுகிறது. உலகம் முழுவதும் ஏற்கனவே 4 ஆயிரம் தியேட்டர்களில் இப்படத்தை திரையிட ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தன. தற்போது மேலும் 2 ஆயிரம் தியேட்டர்களில் படம் திரையிடப்பட உள்ளது. மொத்தம் 6 ஆயிரம் தியேட்டர்களில் படம் வெளியாவதாக ஈராஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

சிறப்புக் கூட்டம்

இந்தப் படம் வெளியாவதையொட்டி, திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களை அழைத்துப் பேசிய ஈராஸ் நிறுவனம், படத்தை பிரமாண்டமாக வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

2 மணி நேரத்தில் 1,25,000 டிக்கெட்டுகள்

சென்னையில் கடந்த 9 - ந்தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட போதே இரண்டு மணி நேரத்தில் ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. பிறகு முன்பதிவு நிறுத்தப்பட்டது. நாளை மீண்டும் துவங்குகிறது.

அபிராமியில்...

அமிராமி மெகா மாலில் நான்கு அரங்குகளிலும் கோச்சடையான் வெளியாகிறது. இந்த அரங்குகளில் டிக்கெட் முன்பதிவை இரு தினங்கள் முன்பாகவே தொடங்கிவிட்டனர். அபிராமியில் முதல் வாரத்துக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீரும் நிலையில் உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X