கோச்சடையான் பொங்கலுக்கு வருதா இல்லையா... அமைதி காக்கும் தயாரிப்பாளர்!
சென்னை: ரஜினியின் கோச்சடையான் படம் பொங்கல் ரேசில் இருக்கிறதா இல்லையா என்ற தகவல் எதையும் சொல்லாமல் மவுனம் காக்கிறது அதன் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் தரப்பு.
இந்த ஆண்டு பொங்கலுக்கு அஜீத், விஜய் படங்கள் வருவதில் தீவிரம் காட்டுகின்றன. கோச்சடையான் படம் ஜனவரி 10 அன்று வெளியாகும் என கடந்த மாதம் அதன் தயாரிப்பாளர் முரளி மனோகர் அறிவித்திருந்தார்.
இதனால் மூன்று பெரிய நடிகர்களின் படங்களுக்கு தியேட்டர்கள் ஒதுக்குவதில் பிரச்சனை ஏற்படும் சூழல் நிலவியது.

கோச்சடையான்
ரஜினியின் படம் நிச்சயம் கல்லா கட்டும் என்று நினைத்த தியேட்டர் உரிமையாளர்கள் கோச்சடையானுக்கு 750 தியேட்டர்கள் வரை ஒதுக்க முடிவு எடுத்தனர்.

பொங்கலுக்கு தல, தளபதி
இது தெரிந்தும் பொங்கலுக்கு விஜய்யின் ஜில்லா மற்றும் அஜீத் குமாரின் வீரம் படங்கள் ரிலீஸாவது உறுதி. இதில் எந்த மாற்றமும் இல்லை என அஜீத்தும், விஜய்யுமே அறிவித்துள்ளனர்.

வசூல் பாதிக்கும்
ரஜினி, அஜீத், விஜய் படங்கள் ஒரே நேரத்தில் ரிலீஸானால் 3 படங்களின் வசூலும் பாதிக்கப்படும் என்று கோச்சடையான் படத் தயாரிப்பாளர் நினைக்கிறார். என்னதான் அதிக தியேட்டர்களில் கோச்சடையானை ரிலீஸ் செய்தாலும் விஜய், அஜீத் படங்களுக்கும் தலா 200 தியேட்டர்களாவது ஒதுக்க வேண்டும் என மல்லுக் கட்டுகிறார்களாம்.

பொங்கலுக்கு இல்லை?
சோலோவா 900 அரங்குகளில் வெளியிட வேண்டும் என கோச்சடையான் தயாரிப்பாளர் விரும்புகிறாராம். ரஜினி இந்த விஷயத்தில் தயாரிப்பாளர் முடிவு செய்து கொள்ளட்டும் என அமைதி காக்கிறாராம்.
ஆனாலும் கோச்சடையான் ரிலீஸ் குறித்து டிசம்பர் 12-ம் தேதிதான் அறிவிப்பார்கள் என தயாரிப்பாளர் தரப்பில் விசாரித்தபோது தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications











