ஐட்யூன், ட்விட்டரில் கோச்சடையான் இசை முதலிடம்!
ஐட்யூன் தரவிறக்கத்தில் ரஜினியின் கோச்சடையான் இசை முதலிடம் பிடித்துள்ளது. அதேபோல, ட்விட்டர் ட்ரெண்டிலும் முதல் பத்து இடங்களில் ஒரு இடத்தைப் பிடித்துள்ளது கோச்சடையான்.
கோச்சடையான் இசை வெளியீட்டு விழா மார்ச் 9-ம் தேதி நடந்தது. ஆனால் அதற்கு சில மணி நேரங்கள் முன்பே சிடிகள் விற்பனைக்கு வந்துவிட்டன. ஐ ட்யூனிலும் தரவிறக்கிக் கொள்ளும் வசதி தரப்பட்டது.
அடுத்த சில மணி நேரங்களில் கோச்சடையான் இசைதான் இந்திய அளவில் ஐட்யூனில் முதலிடத்தைப் பிடித்தது.

ஐ ட்யூன்
இதற்கு முன் ரஜினி நடித்த எந்திரன் படத்தின் இசைதான் ஐ ட்யூனில் முதலிடம் பிடித்த தமிழ்ப் பட இசையாக இருந்தது. அதற்குப் பிறகு மீண்டும் ஒரு ரஜினி படம்தான் இந்த சாதனையைச் செய்துள்ளது.

டிவிட்டரில்..
அதேபோல ட்விட்டர் ட்ரெண்டில் முதல் முறையாக முதல் பத்து இடங்களுக்குள் வந்த ஒரே தமிழ்ப் பட நிகழ்வு கோச்சடையான் இசை வெளியீடுதான்.

விற்பனை
ஆன்லைன் ஸ்டோர்களில் கோச்சடையான் ப்ரீமியம் இசைத் தகடுகள் அதிக அளவு விற்பனையாகியுள்ளன. பிரபல ஆன்லைன் விற்பனை தளமான ப்ளிப்கார்ட்டில் கோச்சடையான் இசைத் தட்டுகள் அவுட் ஆப் ஸ்டாக் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ட்ரைலர்
கோச்சடையான் புதிய ட்ரைலரும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஈராஸ் இணைய தளத்தில் வெளியாகியுள்ள இந்த ட்ரைலரை ஒரே நாளில் ஒரு மில்லியன் பேர் பார்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











