கோச்சடையான் தமிழில் பிளாக்பஸ்டர்... மற்ற மொழிகளில்?

By Shankar

சென்னை: கோச்சடையான் படம் தமிழில் பிளாக்பஸ்டர் என அறிவித்துள்ளது அப்படத்தைத் தயாரித்த ஈராஸ் நிறுவனம்.

தமிழில் பெற்ற வெற்றியை அந்தப் படம் பிற மொழிகளில் பெற்றுள்ளதா... பார்க்கலாம்!

ரஜினி, தீபிகா படுகோன், சரத்குமார் உள்பட பலரும் நடிக்க, சவுந்தர்யா ரஜினிகாந்த் மோஷன் கேப்சரிங் 3 டி தொழில்நுட்பத்தில் தயாரித்த படம் கோச்சடையான். கடந்த வாரம் வெளியான இந்தப் படம், முதல் மூன்று நாட்களில் மட்டும் ரூ 42 கோடியை திரையரங்குகளில் மட்டுமே வசூலித்துவிட்டது.

ரூ 100 கோடி

ரூ 100 கோடி

6 மொழிகளில் வெளியான இந்தப் படம், டிவி உரிமை உள்பட இதர வருவாய் மூலம் ரூ 100 கோடியை ஈட்டிவிட்டதாக ஈராஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை பவர் ஆப் தலைவர் என்றும் அந்த நிறுவனம் வர்ணித்துள்ளது.

தமிழில் வெற்றி

தமிழில் வெற்றி

தமிழில் இந்தப் படம் மெகா வெற்றியைப் பெற்றுள்ளது. ஆனால் மற்ற மொழிகளில் இந்த அளவுக்கு பெரும் வெற்றியைப் பெறவில்லை. காரணம், வெளியான தேதி மற்றும் போட்டியில் குதித்த படங்கள்தான்.

தெலுங்கில்

தெலுங்கில்

தெலுங்கில் மனம் என்ற படம் கோச்சடையானுக்குப் போட்டியாக களமிறங்கியது. அந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

கோச்சடையான் மே 9-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டபோது போட்டிக்குப் படங்களே இல்லை. 1000 அரங்குகளுக்கு மேல் அப்போது ஒதுக்கப்பட்டது. ஆனால் மனம் படம் களமிறங்கியதும் திரையரங்கு எண்ணிக்கை குறைந்துபோனது.

நம்பிக்கை

நம்பிக்கை

இத்தனைக்கும் தெலுங்கில் கோச்சடையானுக்கு விமர்சனங்கள் நல்லவிதமாகவே வந்துள்ளன. இந்த வாரம் படம் பிக்கப் ஆகும் என எதிர்ப்பார்க்கிறார்கள். ஹைதராபாத், விஜயவாடா, திருப்பதியில் மல்டிப்ளெக்ஸ்களில் இப்படத்துக்கு கூட்டம் அதிகரித்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்தியில் டல்

இந்தியில் டல்

இந்தியிலும் இதே பிரச்சினைதான். 9-ம் தேதி படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டபோது, இந்தி பெல்டில் படத்துக்கு பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவியது. ஆனால் படம் தள்ளிப் போனது பெரிய பின்னடைவாகிவிட்டது. கோச்சடையானுக்கு இந்தியில் பெரும்பாலான மீடியாக்கள் 3.5 ரேட்டிங் கொடுத்திருந்தன. ஆனால் வெளியீட்டில் ஏற்பட்ட குழப்பம் மற்றும் ஹீரோபத்னி படத்தின் போட்டி போன்றவை படத்தின் ஓபனிங்கை டல்லடிக்க வைத்துவிட்டன.

வெளிநாடுகளில்

வெளிநாடுகளில்

வெளிநாடுகளில் பிரிட்டன், மலேசியா, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியாவில் மிகப் பெரிய வரவேற்புடன் கோச்சடையான் ஓடிக் கொண்டுள்ளது. அமெரிக்காவில் தமிழ் கோச்சடையான் சிறப்பாக ஓடும் அளவுக்கு, தெலுங்கு, இந்தி போகவில்லை.

போஜ்புரி, பஞ்சாபி என்னாச்சு?

போஜ்புரி, பஞ்சாபி என்னாச்சு?

கோச்சடையான் போஜ்புரி, பஞ்டாபி, மராத்தியிலும் ரிலீசானது. ஆனால் அங்கெல்லாம் படத்தின் நிலை என்னவென்பது இன்னும் தெரியவில்லை.

வசூல் தொடர்கிறது..

வசூல் தொடர்கிறது..

தமிழகத்தில் இதுவரை எந்த ரஜினி படத்துக்கும் இல்லாத அளவு வசூலுடன் கோச்சடையான் ஓடிக் கொண்டிருக்கிறது. வார நாட்களிலும் திரையரங்குகளில் கூட்டம் கட்டியேறுகிறது. இந்த வார இறுதியில் திரையரங்குகள் மூலம் மட்டுமே ரூ 100 கோடியை படம் ஈட்டிவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X