கோச்சடையான் வசூல் மூன்று நாட்களில் ரூ 42 கோடி.. டிவி உரிமை உள்பட ரூ 100 கோடி ஈட்டி சாதனை!
சென்னை: ரஜினியின் கோச்சடையான் படத்தின் முதல் மூன்று நாள் வசூல் விவரம் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. இந்தப் படம் உலகம் முழுவதும் ரூ 42 கோடியை வசூலித்துள்ளது.
டிவி உரிமை மற்றும் பிற வருவாயையும் சேர்த்தால், இந்தப் படம் இப்போதே ரூ 100 கோடியை எட்டி சாதனைப் படைத்துள்ளது.
கோச்சடையான் படம் பல தடங்கல்கள், தாமதங்களுக்குப் பிறகு கடந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வந்தது.

சிறப்புக் காட்சி
படம் வெளியாவதற்கு ஒரு நாள் முன்பாகவே வெளிநாடுகளில் சிறப்புக் காட்சிகள் போடப்பட்டன. இந்தக் காட்சிகளுக்கு திரண்டு வந்தனர் ரஜினி ரசிகர்கள். அரங்குகள் நிரம்பி வழிந்தன.

பாஸிடிவ் விமர்சனங்கள்
இந்த சிறப்புக் காட்சியில் மட்டுமே ரூ 5கோடிக்கு மேல் வசூல் கிடைத்தது. மேலும் படம் குறித்த பாஸிடிவ் விமர்சனங்கள் வந்ததால், படம் வெளியான அன்று அத்தனை திரையரங்குகளிலும் திருவிழாக் கோலம்தான்.

ரூ 42 கோடி
முதல் மூன்று நாட்களில் மட்டும் கோச்சடையான் தியேட்டர்கள் மூலம் ரூ 42 கோடியை ஈட்டியுள்ளது கோச்சடையான். இதில் இந்தியாவில் வசூலான தொகை மட்டும் ரூ 30 கோடி. வெளிநாடுகளில் ரூ 12 கோடி.

சென்னையில் மட்டும்
சென்னை மாநகரில் மட்டும் இந்த மூன்று நாட்களில் ரூ 4.16 கோடியைக் குவித்து சாதனைப் படைத்துள்ளது கோச்சடையான்.

ரூ 100 கோடி
திரையரங்க வசூல் தவிர்த்து, 6 மொழிகளில் படத்தின் சேட்டிலைட் உரிமைகள், இசை வெளியீட்டு உரிமை, கார்பன் மொபைல் மற்றும் ஏர்டெல்லுடன் போட்ட ஒப்பந்த உரிமை, ரிங் டோன் உரிமை, வீடியோ கேம்ஸ் என அனைத்து வழியிலும் வந்த வருவாய் ரூ 100 கோடியைத் தாண்டியுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய சினிமா வசூலில் இது புதிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில்...
இந்தப் படம் அமெரிக்காவில் அதிக அரங்குகளில் வெளியானது. இன்னும் பல அரங்குகளின் வசூல் நிலவரம் வெளியாகவில்லை. அதையும் சேர்த்தால் வசூல் இன்னும் அதிகமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications











