கோச்சடையானுக்கு முடிந்தது சென்சார்... எந்த கட்டுமில்லாமல் யு சான்று!

By Shankar

கோச்சடையான் படத்தின் சென்சார் பணிகள் முடிந்தன. படத்துக்கு எந்த கட்டும் இல்லாத யு சான்று தந்துள்ளனர்.

ரஜினி மூன்று வேடங்களில் நடித்துள்ள, இந்தியாவின் முதல் நடிப்பு பதிவாக்க தொழில்நுட்பத் திரைப்படம் கோச்சடையான். தீபிகா படுகோன், ஷோபனா இருவரும் அவருக்கு ஜோடிகளாக நடித்துள்ளனர்.

கேஎஸ் ரவிக்குமார் கதை திரைக்கதை எழுத, சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

சரத்குமார், ஜாக்கி ஷெராப், நாசர், ஆதி உள்பட பலரும் நடித்துள்ள இந்தப் படத்தில் மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷின் உருவத்தை மீண்டும் உலவ வைத்துள்ளனர்.

Kochadaiiyaan gets clean U

இந்தப் படத்தை ஏப்ரல் மாதமே வெளியிட்டு விடும் முயற்சியில் உள்ளனர்.

படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்துவிட்டதால், இதன் தமிழ்ப் பதிப்பை சென்சாருக்குப் போட்டுக் காட்டினார் சவுந்தர்யா. படம் பார்த்த சென்சார் குழுவினர் பிரமித்துப் போய்விட்டார்களாம்.

படத்துக்கு அனைவரும் பார்க்கத் தகுந்த படம் என்ற யு சான்று அளித்துள்ளனர்.

தெலுங்கு, இந்தி, மராத்தி உள்ளிட்ட மொழிப் படங்களை அந்தந்த பிராந்திய சென்சாருக்குப் போட்டிக் காட்டி சான்றிதழ் பெறும் முயற்சியில் உள்ளார் சவுந்தர்யா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X