நாலரை கோடி கொடுங்க.. கோச்சடையான் தயாரிப்பாளரைக் கேட்கும் விநியோகஸ்தர்கள்!
கோச்சடையான் படம் ரூ 200 கோடியை வசூலித்துவிட்டதாக தயாரிப்பாளர் தரப்பு அறிக்கை வெளியிட்டிருந்தது. ஆனால் இப்போது நஷ்டக் கணக்கைச் சொல்ல ஆரம்பித்துள்ளனர் விநியோகஸ்தர்கள்.
இந்தப் படத்தை வெளியிட்டதில் சில ஏரியாக்களில் மட்டும் நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாம்.

கூட்டிக் கழித்துப் பார்த்ததில் ரூ 4 கோடி நஷ்டம் காட்டியதாம் கணக்கு. உடனே, இதை வசூலிக்க என்ன செய்யலாம் என்று யோசித்த விநியோகஸ்தர்கள், முதல் கட்டமாக தயாரிப்பாளர் தரப்புக்கு தகவல் அனுப்பியுள்ளார்களாம்.
இந்தப் படத்தின் லாப நஷ்டம் எதுவாக இருந்தாலும் தன்னிடம் வரக்கூடாது என ஏற்கெனவே ரஜினி கூறியது நினைவிருக்கலாம்.
Comments


Click it and Unblock the Notifications