'செலக்டிவ்' பத்திரிகையாளர்களுக்காக கோச்சடையான் பாடல் கேட்பு நேரம்!
ரஜினி அல்லது அவர் சம்பந்தப்பட்ட பட செய்திகள் என்றால் அத்தனை பத்திரிகையாளர்களுமே பாரபட்சமின்றி செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள்.
ஆனால் அவர் மகளோ தேர்ந்தெடுத்து சில பத்திரிகையாளர்களை அழைத்து பிரஸ் மீட் நடத்தி வருகிறார் கோச்சடையானுக்காக!
கோச்சடையான் சிறப்பு மொபைல்கள் வெளியீட்டு நிகழ்ச்சியில் சில தினசரிகளை மட்டும் அழைத்திருந்த கோச்சடையான் குழு, அடுத்து நடந்த கோச்சடையான் பாடல் கேட்பு நிகழ்ச்சிக்கும் இதே வேலையைச் செய்துள்ளனர்.
செய்தியாளர்கள் என்றாலே ரஜினி குடும்பத்தினர் பாரபட்சம் காட்டுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையில், வேண்டப்பட்ட பத்திரிகை - தேவையில்லாத பத்திரிகை என ரஜினி மகள் பேதம் பார்த்து அழைப்பு வைத்து வருகிறார் என்ற புதிய குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளார்.

பாடல் கேட்பு நேரம்
சமீபத்தில் கோச்சடையான் படத்தின் பாடல்கள் சிலவற்றின் ஆடியோவைக் கேட்கவும் இதே போல தங்களுக்கு வேண்டப்பட்ட சில பத்திரிகையாளர்களை மட்டும் அழைத்து போட்டுக் காட்டியுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் கோச்சடையான் படத்தில் இடம்பெறும் நான்கு பாடல்களை ஒலிக்க விட்டுள்ளனர். ஒவ்வொரு பாடலுக்கும் சவுந்தர்யா விளக்கமும் கொடுத்தாராம்.

அழுதிடுவேன்
மணப்பெண்ணின் சத்தியம் என்று தொடங்கும் பாடலை ரஜினி மனைவி லதா பாடியுள்ளார். அந்தப் பாடல் ஒலித்தபோது, 'இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் நான் கண்ணீர் விட்டு அழுதுவிடுவேன்' என்றார் சவுந்தர்யா.

ரஜினி பாட்டு
ரஜினி பாடும் மாற்றம் ஒன்றுதான் மாறாதது பாடல், படத்துக்காக மட்டுமல்ல, வாழ்க்கையில் ஒவ்வொருக்கும் ரஜினி கூறும் அறிவுரை என்றார் சவுந்தர்யா. குறிப்பாக ரஜினி தன் ரசிகர்களுக்காகவே பாடிய பாட்டு என்றார்.

கர்ம வீரன்
கர்ம வீரன் பாடலை ஏ ஆர் ரஹ்மானும் ரைஹானாவும் பாடியுள்ளனர். படத்தின் க்ளைமாக்ஸில் வரும் இந்தப் பாடல் மிகவும் உணர்ச்சிப் பூர்வமானது.

வாலியின் பாட்டு
இந்தப் படத்துக்காக அமரர் வாலி எழுதிய டூயட் பாடலான மெதுவாகத்தான்... பாடலையும் போட்டுக் காட்டினர். இந்தப் பாடலை எஸ் பி பாலசுப்ரமணியமும் சாதனா சர்க்கமும் பாடியுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்துவும் பங்கேற்றார்.


Click it and Unblock the Notifications











