ஏப்ரல் 11-ம் தேதிக்கு தெனாலிராமனை தயாராக்கும் வடிவேலு.... ரஜினியோடு மோதலா?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மோதுகிறார் வடிவேலு... ரஜினி படம் வெளியாகும் தேதியன்றே தனது தெனாலிராமனையும் ரிலீஸ் பண்ணப் போவதாக தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இது புதிய பரபரப்பைக் கிளப்பியுள்ளது. காரணம், இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களால் நீண்ட நாட்களாக எதிர்ப்பார்க்கப்பட்டவை.

3 ஆண்டுகளுக்கு....
ஒருவர் இந்தியாவின் மாபெரும் சூப்பர் ஸ்டார் என்றால், அடுத்தவர் தமிழ் சினிமாவின் இணையற்ற காமெடி நடிகர்களில் ஒருவர். மூன்று ஆண்டுகள் அஞ்ஞாதவாசத்துக்குப் பின் முதல் முறையாக நடிக்கிறார்.

சாத்தியமா?
ஆனால் திரையரங்க உரிமையாளர்களின் தேர்வு கோச்சடையானாக இருப்பதால் வடிவேலுவின் இந்தப் படம் ஏப்ரல் 11 அன்று வெளியாவது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தெனாலிராமன் பராக் பராக்
கோச்சடையான் பட ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பிறகுதான் வடிவேலு சித்திரை திங்கள் "ஜெகஜால புஜபல தெனாலிராமன் பராக்... பராக்... பராக்...!" என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

750 அரங்குகள்
ரஜினியின் கால்ஷீட்டுக்காகக் காத்திருக்கும் ஏஜிஎஸ் நிறுவனத்தின் படம்தான் இந்த தெனாலிராமன். ரஜினி படத்துக்கு 750 திரையரங்குகள் வரை ஒதுக்குவதாக ஏற்கெனவே திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மோதல் ரத்து?
தெனாலிராமன் ரிலீஸ் பற்றி ஏஜிஎஸ் நிறுவனத்திடம் விசாரித்தபோது, இன்னும் முடிவு செய்யவில்லை, என்று தெரிவித்தனர்.
எனவே கோச்சடையானுடன் தெனாலிராமன் மோதுவது கடைசி நேரத்தில் ரத்தாகும் என்றே தெரிகிறது.


Click it and Unblock the Notifications











