டோக்கியோவில் கோச்சடையான் இசை வெளியீட்டு விழா

By Siva

சென்னை: ரஜினிகாந்த் நடித்துள்ள கோச்சடையான் படத்தின் இசை வெளியீட்டு விழா டோக்கியோவில் நடக்கவிருக்கிறது.

உடல்நலம் பாதிக்கப்பட்டு தேறிய பிறகு ரஜினிகாந்த் நடித்துள்ள படம் கோச்சடையான். தனது இளைய மகள் சௌந்தர்யாவின் இயக்கத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக இந்தி நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார்.

இந்த படம் எப்பொழுது ரிலீஸாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

கேன்ஸ் விழாவில் கோச்சடையான்

கேன்ஸ் விழாவில் கோச்சடையான்

தற்போது நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கோச்சடையான் டீசர் வெளியிடப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் அதன் பிறகு அது குறித்த பேச்சே இல்லை.

இசை வெளியீட்டு விழாவை எங்கே நடத்தலாம்?

இசை வெளியீட்டு விழாவை எங்கே நடத்தலாம்?

கோச்சடையான் இசை வெளியீட்டு விழாவை ஒரு வெளிநாட்டில் பிரமாண்டமாக நடத்த வேண்டும் என்று நினைத்துள்ளார் ரஜினி. அப்படி நடித்தினால் படத்திற்கும் விளம்பரம் கிடைக்குமே என்று கருதினாராம்.

ஜப்பானில் கோச்சடையான்

ஜப்பானில் கோச்சடையான்

ஜப்பானில் ரஜினிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதனால் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கோச்சடையான் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.

முத்து போட்ட போடை மறக்க முடியுமா?

முத்து போட்ட போடை மறக்க முடியுமா?

ரஜினியின் முத்து படம் ஜப்பானில் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அதில் இருந்து அங்கு ரஜினிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஜப்பானியர்களால் இன்றும் மறக்க முடியாத படமாக முத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X