என்ன, கோச்சடையான் ஏப்ரல் 5ம் தேதி ரிலீஸா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடித்துள்ள படம் கோச்சடையான். இந்த படத்தை ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா இயக்கியுள்ளார். கோச்சடையான் ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் படம் எப்பொழுது ரிலீஸ் ஆகும் என்று ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இந்நிலையில் கோச்சடையான் வரும் ஏப்ரல் மாதம் 5ம் தேதி ரிலீஸ் ஆகிறது என்ற தகவல் காட்டுத் தீ போன்று பரவியது.
இது குறித்து கோச்சடையான் குழுவிடம் கேட்டதற்கு அப்படியெல்லாம் இல்லை. இன்னும் ரிலீஸ் பற்றி பேச்சே எடுக்கவில்லை என்று தெரிவித்தனர்.
இந்த படத்திற்கு வைரமுத்து பாடல்கள் எழுத ஆஸ்கர் மன்னன் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஈராஸ் இன்டர்நேஷனல் மற்றும் மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு பொறுப்பை ஏற்றுள்ளது.
எப்ப தலைவா படம் ரிலீஸ் ஆகும்?
Comments


Click it and Unblock the Notifications