கோடை விடுமுறையில் ரசிகர்களைக் கூல்படுத்த வருகிறார் கோச்சடையான்?

By Siva

சென்னை: கோச்சடையான் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போகிறதாம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தீபிகா படுகோனே, சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் கோச்சடையான். படத்தை ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா இயக்கியுள்ளார். படப்பிடிப்பு வேலைகள் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் மேற்பார்வையில் நடந்தது.

கோச்சடையான் படம் ரிலீஸாகும் தேதி தான் இதுவரை குறிப்பிடப்படாமலேயே உள்ளது.

கிராபிக்ஸ்

கிராபிக்ஸ்

படத்தில் கிராபிக்ஸுக்கு தான் அதிக வேலை. அதனால் தான் கோச்சடையான் பட வேலைகள் முடிய நீண்ட நாட்கள் ஆகின. ஆனால் தற்போது கிராபிக்ஸ் வேலைகள் முடிந்துவிட்டன.

ரஜினி பிறந்தநாள்

ரஜினி பிறந்தநாள்

கோச்சடையான் படம் ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி ரிலீஸாகும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது படம் அடுத்த மாதம் ரிலீஸாவது போன்று தெரியவில்லை.

பொங்கலுக்கு

பொங்கலுக்கு

கோச்சடையானை பொங்கலுக்கு ரிலீஸ் செய்யுமாறு ரஜினி தனது மகளிடம் கூறியதாக செய்திகள் வெளியாகின. ஆனால் படம் பொங்கலுக்கு ரிலீஸாகாது என்று தெரிகிறது.

கோடை விடுமுறை

கோடை விடுமுறை

கோச்சடையான் படத்தை கோடை விடுமுறையின்போது ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாம். இந்த பொங்கலுக்கு தல, தளபதி தவிர சூப்பர் ஸ்டார் படமும் வரும் என்று எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

அதனால் என்ன லேட்டாக வந்தாலும் தலைவர் லேட்டஸ்டாக கலக்குவாரே...

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X