கோச்சடையான் முதல் டீசர்... பெரும் அதிருப்தியில் சரிபாதி ரசிகர்கள்!

By Shankar

சென்னை: பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே வெளியான ரஜினியின் கோச்சடையான் டீசர், அந்த எதிர்ப்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு இல்லை என்றும், ஏமாற்றமளிப்பதாகவும் ரஜினியின் தீவிர ரசிகர்களே கருத்து தெரிவித்துள்ளனர்.

செப்டம் 9-ம் தேதி பிள்ளையார் சதுர்த்தியன்று ரஜினியின் கோச்சடையான் முதல் டீசரை வெளியிட்டார் படத்தின் இயக்குநர் சௌந்தர்யா ரஜினி.

வெளியான வேகத்தில் யு ட்யூப் வரலாற்றில் புதிய சாதனை எனும் அளவுக்கு இந்த டீசரை விழுந்தடித்துக் கொண்டு பார்த்தார்கள் ரசிகர்கள்.

வெளியான ஒரு நாளில் 1 மில்லியன் பார்வையாளர்களையும், 36 மணி நேரத்துக்குள் 1.8 மில்லியன் பார்வையாளர்களையும் பெற்று சாதனை படைத்தது இந்த டீசர்.

ஆனால்... பார்த்தவர்களைத் திருப்திப்படுத்தியதா இந்த ட்ரைலர்? இதுபற்றி ரசிகர்கள், வாசகர்கள் கருத்து என்ன என்று நேற்றே கேட்டிருந்தோம்.

சரிபாதி ரசிகர்களுக்குப் பிடிக்கவில்லை

சரிபாதி ரசிகர்களுக்குப் பிடிக்கவில்லை

அதற்கு வந்த பதில்கள் கலவையாகத்தான் இருந்தன. சரி பாதி ரசிகர்கள் இந்த டீசரை மொக்கை என்றும், ஏமாற்றமளிப்பதாக உள்ளதென்றும் கருத்து தெரிவித்திருந்தனர்.

ரத்தமும் சதையும் ஆக்ஷனும் விகல்பமில்லாத காமெடியும், பொறுப்பான அறிவுரைகளும் சொல்லும் நிஜ ரஜினிதான் தங்கள் சாய்ஸ் என இவர்கள் தெரிவித்துள்ளனர்.

கார்ட்டூன் ரஜினி வேண்டாம்

கார்ட்டூன் ரஜினி வேண்டாம்

ஒருவர், "நான் ஒரு தீவிர ரஜினி ரசிகன்தான். ஆனாலும் எனக்கு இந்த கார்ட்டூன் ரஜினி பிடிக்கவில்லை," என்று கூறியிருந்தார்.

குழந்தைகளுக்குப் பிடிக்கலாம்...

குழந்தைகளுக்குப் பிடிக்கலாம்...

இன்னொருவரோ, "படத்தின் காட்சிகள் நன்றாக இருக்கின்றன. ஆனால், படத்தில் ரஜினிகாந்த் உடைய முக அசைவுகள் எல்லாம் பொம்மை மாதிரிதான் இருக்கிறது.

சிலவேளை ரஜினிகாந்துடைய மனசு குழந்தை போல இருப்பதால் பொம்மை மாதிரி செய்தார்களோ தெரியவில்லை. ஹிஹி... இந்தியாவிலே முதலாவது என்று சொல்வதாலும் அது பொம்மை மாதிரி இருந்தால், சாதாரணமானதுதானே. 3d கார்ட்டூன் படம் பார்ப்பது போன்ற உணர்வு வந்தது. குழந்தைப் பிள்ளைகளுக்கு பிடிக்கும் என்று நினைக்கிறேன்," என்று கருத்து தெரிவித்துள்ளார்.

ரஜினி யோசிக்கணும்

ரஜினி யோசிக்கணும்

"படம் பூரா இந்த மாதிரி ஃபார்மேட்லதான் வரும்னா, ரஜினி கொஞ்சம் யோசிக்கிறது நல்லதுன்னு எனக்குப் படுது," என்று யோசனை கூறியுள்ளார் கோபி எனும் வாசகர்.

அவதார் மாதிரி எதிர்ப்பாத்தோம்

அவதார் மாதிரி எதிர்ப்பாத்தோம்

பெரும்பாலான ரசிகர்கள் இந்தப் படம் அவதார் மாதிரி இருக்கும் என்று சொன்னதால், அந்த அளவு எதிர்ப்பார்ப்பை வளர்த்துக்கிட்டோம். இப்போது ஏமாற்றமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.

"எனக்கும் ரஜினினா பிடிக்கும். ஆனா இப்படி பாக்கறதுக்கு கார்ட்டூன் சேனல் பார்த்துட்டு போயிரலாம். ரஜினின்னா இயற்கையா பார்க்கத்தான் விரும்பறோம்," என்று ஒருவரும், "ரஜினி திரையில் வந்தாலே கூட்டம் வந்துடும். படம் ஓடும். ஆனா இப்படி கார்ட்டூனா இருந்தா எப்படி ஓடும்னு தெரியலையே," என்று சிலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

முதல் முயற்சி அப்படித்தான் இருக்கும்...

முதல் முயற்சி அப்படித்தான் இருக்கும்...

இன்னும் சில ரசிகர்கள் சமாதானம் சொல்லும் வகையில், "இந்தியாவைப் பொறுத்தவரை இது முதல் முயற்சி. அப்படித்தான் இருக்கும். இப்போது பார்த்திருப்பது டீசர்தான். பொறுத்திருந்து பார்க்கலாம்," என்று கூறியுள்ளனர்.

வெயிட் அண்ட் ஸீ

வெயிட் அண்ட் ஸீ

கோச்சடையான் தரப்பில் இதுபற்றிப் பேசிய போது, "இது டீசர்தான். ட்ரைலர் இல்லை. ரஜினியின் குரல் கூட ஒலிக்காத சில காட்சிகள் மட்டுமே காட்டப்பட்டது. விரைவில் முழுமையான 3 நிமிட ட்ரைலர் வரவிருக்கிறது. அதைப் பார்த்த பிறகு கருத்து சொல்லுங்கள். எங்களைப் பொறுத்தவரை இந்த டீசரே பெரிய பரபரப்பைக் கிளப்பியுள்ளது. வரலாறு காணாத அளவுக்கு யுட்யூபில் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. நிச்சயம் எதிர்ப்பார்க்காத ஒரு புதிய பரிமாணத்தில் இந்தப் படம் இருக்கும்," என்கிறார்கள் அடக்கத்துடன்.

நல்லாருந்தா எல்லாருக்கும் மகிழ்ச்சிதான்!!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X