கோச்சடையான்தான் பெஸ்ட்… இயக்குநர் சௌந்தர்யாவின் சர்ட்டிபிகேட்

By Mayura Akilan

ரஜினி நடித்த படங்களிலேயே கோச்சடையான்தான் பெஸ்ட் என்று அவரது மகளும், படத்தின் இயக்குநருமான சௌந்தர்யா கூறியுள்ளார்.

ரஜினி படம் என்றாலே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். படத்தின் போஸ்டர் கூட எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். என்னதான் சஸ்பென்ஸ் ஆக பாதுகாத்தாலும் எப்படியாவது தகவலை வாங்கி ஒரு செய்தியாவது போட்டுவிடுவார்கள்.

அபூர்வ ராகங்கள் தொடங்கி எந்திரன் வரை ரஜினி நடித்த படங்களைப் போல அல்லாமல் கோச்சடையான் புதுவித எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. மகளின் இயக்கத்தில் முதல் முதலாக சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் படம் என்பதாலும் கொஞ்சம் கூடுதலான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் படத்தைப் பற்றி இயக்குநரே முதன் முறையாக தகவலை வெளியிட்டுள்ளார் மேற்கொண்டு படியுங்களேன்.

டபுள் ஆக்ட் ரஜினி

டபுள் ஆக்ட் ரஜினி

கோச்சடையான் படத்தில் ரஜினிக்கு அப்பா மகன் என இரட்டை வேடமாம். அப்பா கோச்சடையான், மகன் ராணா என கலக்கலாக ரஜினி ரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கிறார்.

ஷோபனா – தீபிகா படுகோனே

ஷோபனா – தீபிகா படுகோனே

அப்பா கோச்சடையானுக்கு ஷோபனா, மகன் ராணாவிற்கு தீபிகா படுகோனே என இரண்டு ஹீரோயின்கள்.

பரதக்கலைஞர் ரஜினி

பரதக்கலைஞர் ரஜினி

தளபதியாக, போர் வீரனாக பட்டையைக் கிளப்பினாலும் கோச்சடையான் ஒரு பரதக் கலைஞராம். அதனால்தான் ஷோபனாவை ஜோடியாக்கியிருக்கின்றனர்.

ரஜினி பாடிய பாடல்

ரஜினி பாடிய பாடல்

கோச்சடையான் படத்திற்காக ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ரஜினி ஒரு பாடலும் பாடியிருக்கிறார்.

நண்பனுக்காக உலகை ஜெயிப்பவர்

நண்பனுக்காக உலகை ஜெயிப்பவர்

கோச்சடையான் நாட்டின் தளபதியாக நடிக்கிறார். நாட்டு மன்னன் நண்பன் என்பதால் அவருக்காக உலகத்தையே ஜெயிச்சு அவர் காலடியில் கொண்டுவந்து கொட்டணும்னு துடிக்கிற வீரர்.

ராணா நூறு மடங்கு வேகமானவன்

ராணா நூறு மடங்கு வேகமானவன்

ஒரு தலைவனுக்குத் தேவையான அத்தனை தகுதிகளும் திறமைகளும் கோச்சடையானிடம் இருக்கும். அவர் பையன் ராணா, அவரைவிட நூறு மடங்கு வேகமானவன். ஆனா, இளங்கன்று பயமறியாதுனு சொல்வாங்களே... அப்படிப் பரபரனு இருப்பார் ராணா.

கோச்சடையான்தான் பெஸ்ட்

கோச்சடையான்தான் பெஸ்ட்

ரஜினி இதுவரை பண்ணினதிலேயே கோச்சடையான்தான் பெஸ்ட் கேரக்டரா இருக்கும். அவர் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அத்தனை கமர்ஷியல் கலாட்டாக்களும் படத்தில் இருக்கு என்கிறார் இயக்குநர் சௌந்தர்யா.

பஞ்ச் டயலாக் ஸ்டைல் நடை

பஞ்ச் டயலாக் ஸ்டைல் நடை

படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ரஜினி பஞ்ச் டயலாக் பேசிவிட்டு செம கெத்தாக ஒரு ஸ்டைல் நடை நடந்திருக்கிறாராம். அதைப் பார்த்துவிட்டு கட் சொல்ல மறந்துவிட்டு மொத்த யூனிட்டும் கை தட்டி ரசித்தனராம்.

என்வழியும் தனி வழிதான்

என்வழியும் தனி வழிதான்

'கோச்சடையான்' படத்தில் எந்த இடத்திலும் கார்ட்டூன் ஃபீல் வராது என்கிறார். 'உன் பாதையை நீயே உருவாக்கு. மத்தவங்கதான் அதுல வரணுமே தவிர, நீ அடுத்தவங்க பாதையில போகக் கூடாது' என்று அப்பா சொன்ன அட்வைஸைத்தான் கடைபிடிக்கிறேன். என் வழி... அப்பா சொல்லித் தந்த அதே தனி வழி!''என்று கூறி பெருமிதப்படுகிறார் சௌந்தர்யா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X