twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    120 சதவீத வட்டி கேட்ட பைனான்சியர்கள் மீது கோச்சடையான் தயாரிப்பாளர் போலீசில் புகார்!

    By Shankar
    |

    சென்னை: 120 சதவீத வட்டி கேட்டு தொந்தரவு செய்ததாக பைனான்சியர்கள் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார் கோச்சடையான் படத் தயாரிப்பாளர்கள் மீடியா ஒன் குளோபல் நிறுவனம்.

    ரஜினி நடித்த கோச்சடையான் படத்தின் தயாரிப்பாளர் மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட்.

    Kochadaiyaan producers filed complaint on financiers

    இந்த நிறுவனம் சார்பில் அதன் உரிமையாளர்கள் சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் மனு அளித்துள்ளனர்.

    இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

    ஆட் பியுரோ நிறுவனத்தினரான நாஹர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் எங்களைச் சந்தித்து தங்களிடம் மிகப்பெரிய அளவில் முதலீட்டு நிதிகள் இருப்பதாகவும் தாங்கள் நட்சத்திர மதிப்புள்ள மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து அந்நிதியை முதலீடு செய்ய விரும்புவதாகவும் கூறினர்.

    இந்த சந்திப்பு 2014-ம் ஆண்டு ஏப்ரல் முதல் வாரத்தில் நடைபெற்றது. அப்போது எங்களுக்கு கோச்சடையான் படத்தை முடித்து வெளியிட பணம் உதவி தேவைப்பட்ட சமயம். படத்துக்கான முழு தொகையும் நிதி நிறுவனத்தின் உள்ளிருப்பு தொகையில் இருந்தும், வங்கி கடனில் இருந்தும், ஈரோஸ் நிறுவனத்திடம் இருந்தும், தனியார் நிதி நிறுவனங்களிடம் இருந்தும் பெற்றோம்.

    கோச்சடையான் திரைப்படம் வெளியாகும் சமயத்தில் கடனை அடைத்து படத்தை வெளியிட எங்களுக்கு ரூ.20 கோடி தேவைப்பட்டது. பல நிபந்தனைகளோடு அவர்கள் எங்களுக்கு ரூ. 20 கோடியை கொடுக்க முன் வந்தனர்.

    படத்திற்கு தங்களை இணை தயாரிப்பாளர்கள் என்று படத்திலும், செய்திதாள் விளம்பரங்களிலும் போட வேண்டும் என்று நிர்பந்தித்தனர். ஆனால் அவர்கள் ரூ.20 கோடிக்கு பதிலாக ரூ.10 கோடியை மட்டும் எங்கள் நிறுவனத்துக்கு ஆர்.டி.ஜி.எஸ். மூலமாக 28.4.2014 அன்று வழங்கினர்.

    ரூ.10 கோடி கொடுக்கப்பட்ட ஒரு வாரத்தில் ரூ.3.70 கோடியை திரும்பக் கேட்டுப் பெற்றனர். அடுத்தடுத்து எங்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டனர். மொத்தம் ரூ 9.20 கோடியை அவர்களுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே திரும்பக் கொடுத்துவிட்டோம். நாங்கள் அவர்களுக்கு செலுத்த வேண்டிய மீதி தொகை ரூ.80 லட்சம் மட்டுமே. அதற்கு பதிலாக எங்களது ரூ.5 கோடி மதிப்புள்ள சொத்தின் ஆவணம் பிணையமாக ஆட் பியுரோ நிறுவனத்தாரிடம் உள்ளது.

    இறுதியில் ஆவணங்களை திரும்ப தருவதற்கு பதிலாக, அதிர்ச்சி அளிக்கும் வகையில் வருடத்திற்கு 120 சதவீதம் என்னும் வட்டி விகிதத்தில் ரூ.16 கோடியை எங்களிடம் கேட்டனர். ஏற்கனவே நாங்கள் அவர்களுக்கு ரூ.3.7 கோடியை உடனே திருப்பி அளித்தது குறிப்பிடத்தக்கது.

    ஆட் பியுரோ நிறுவனத்தார் சட்டவிரோதமாக அதிக வட்டி கேட்டு எங்களை நிர்பந்திக்கிறார்கள். எனவே அவர்கள் மீது குற்றவியல் வழக்கை போலீஸ் கமிஷனரிடம் தாக்கல் செய்துள்ளோம்".

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    English summary
    The Producers of Rajinikanth's Kochadaiyaan have filed a police complaint against the financiers for demanding ushering interest rates.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X