ரஜினியின் 63வது பிறந்தநாள் அன்று கோச்சடையான் ரிலீஸ்
சென்னை: கோச்சடையான் படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளான டிசம்பர் மாதம் 12ம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உடல் நலம் பாதிக்கப்பட்ட பிறகு ரஜினிகாந்த் நடித்துள்ள முழு நீள படம் கோச்சடையான். அவர் ஷாருக்கானின் ரா ஒன் படத்தில் ஒரு காட்சியில் மட்டும் வந்து விட்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோச்சடையான் படத்தை ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா அஸ்வின் இயக்கியுள்ளார்.

மோஷன் கேப்சர்
கோச்சடையானில் மோஷன் கேப்சர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனாலேயே படத்தின் வேலைகளை முடிக்க நீண்ட காலம் ஆனது.

2 நாட்கள் நடித்த தீபிகா
கோச்சடையான் படத்தில் நாயகி தீபிகா படுகோனே வரும் காட்சிகள் வெறும் 48 மணிநேரத்தில் படமாக்கப்பட்டது. இரண்டு நாட்கள் நடித்ததற்கு தீபிகாவுக்கு ரூ. 3 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டதாம்.

டீஸர்
கோச்சடையான் டீஸர் விநாயகர் சதுர்த்தி அன்று ரிலீஸ் செய்யப்பட்டது. யூ டியூப்பில் லட்சக் கணக்கானோர் டீஸரை பார்த்தனர்.

படம் ரிலீஸ்
கோச்சடையான் ரஜினிகாந்தின் பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிறந்தநாள் அன்று சிவாஜி 3டி படம் ரிலீஸ் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

அக்டோபர் 7
அக்டோபர் 7ம் தேதி கோச்சடையான் படத்திற்காக எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடிய 'எங்கே போகுதோ வானம்' என்ற பாடல் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications











