twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நெருங்குது ஸ்ட்ரைக்: குழப்பமான சூழலில் கோடம்பாக்கம்!

    By Shankar
    |

    Recommended Video

    மார்ச் 1 முதல் புதிய படங்கள் ரிலீஸ் ஆகாது- வீடியோ

    தென்னிந்திய மாநிலங்கள் அனைத்திலும் மார்ச் 1 முதல் புதிய திரைப்படங்களை ரிலீஸ் செய்வதில்லை என சில வாரங்களுக்கு முன் திரைப்பட தயாரிப்பாளர்களின் கூட்டுக் குழு அறிவித்தது.

    டிஜிட்டல் முறையில் தியேட்டர்களில் படங்களை திரையிடும் பணிகளை செய்து வரும் QUBE, UFO, PHD, சோனி, கிராபுல் நிறுவனங்ககள் தொடர்ந்து கட்டணங்களை உயர்த்தி வந்தன. இன்றைய சினிமா வசூல் நிலவரங்கள் மோசமாக உள்ளன. படத்தைத் திரையிடுவதற்கான அனைத்து அடிப்படை பணிகளையும் தயாரிப்பாளர்கள் செலவில் செய்யப்படுவதால் டிஜிட்டல் நிறுவனங்கள் தங்கள் கட்டணங்களை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த பல வருடங்களாக தயாரிப்பாளர்கள் தரப்பில் எழுப்பப்பட்டு வந்தது. தென் மாநிலங்கள் ஒன்று கூடியதால் அவர்களுடன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது.

    Kodambakkam in big confusion

    மார்ச் 1 முதல் புதிய படங்களை திரையிடுவதில்லை என்று தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்து உள்ளது. இதற்கு தமிழ்நாடு விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. ஏற்கெனவே ரிலீஸ் செய்யப்பட்டு ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படங்களை தியேட்டர்களில் நிறுத்தி விடுவதா? என்பது பற்றி தெளிவான முடிவை திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பதில் குழப்பம் நீடிக்கிறது.

    புதிய படங்கள் ரிலீஸ் இல்லை என்றால் பழைய படங்களை திரையிடலாமா என்பதற்கும் தெளிவான முடிவு அறிவிக்கப்படவில்லை. தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் பல அமைப்புகளாக பிரிந்து செயல்படுவதால் இவர்களை ஒருங்கிணைப்பதில் சிரமம் உள்ளது. இவர்களில் சிலர் டிஜிட்டல் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவதால் திரையரங்குகள் அனைத்தும் ஒரே நாளில் மூடப்படும் வாய்ப்புகள் குறைவு என்கிற குழப்பமான சூழ்நிலை கோடம்பாக்கம் சினிமாவில் தொடர்கிறது.

    English summary
    There is a big confusion prevails in Kodambakkam due to cinema strike nearing.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X