twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்க்கும் கோடாங்கி கதாபாத்திரம்.. இராம ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்!

    |

    சென்னை : சூர்யாவின் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் அரிசில் மூர்த்தி இயக்கியுள்ள திரைப்படம் இராம ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்

    Recommended Video

    Raame Aandalum Raavane Aandalum movie review | Yes sa Busss sa | Filmibeat Tamil

    ரம்யா பாண்டியன், வாணி போஜன், முதுன் மாணிக்கம் என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

    எனக்கும் விஜய்க்கும் பிரச்சனை இருப்பது உண்மை தான் ... வெளிப்படையாக சொன்ன எஸ்ஏசி எனக்கும் விஜய்க்கும் பிரச்சனை இருப்பது உண்மை தான் ... வெளிப்படையாக சொன்ன எஸ்ஏசி

    இதில் முக்கியமான வேடத்தில் கோடாங்கி என்கிற கதாபாத்திரம் இப்பொழுது ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.

    நேரடியாக ஓடிடியில்

    நேரடியாக ஓடிடியில்

    எளிமையான கிராமத்தை கதைக் களத்தில் உருவாகியுள்ள இராம ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் திரைப் படத்தை அறிமுக இயக்குனர் அரிசில் மூர்த்தி இயக்கியுள்ளார். இப்படத்தை சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தயாரித்துள்ளனர். திரையரங்குகளில் வெளியாக இருந்த இந்த திரைப்படம் இப்பொழுது நேரடியாக ஓடிடியில் வெளியாகி உள்ளது.

    அரசியல்வாதிகளின் வன்மத்தால்

    அரசியல்வாதிகளின் வன்மத்தால்

    கருப்பன் மற்றும் வெள்ளையன் என இரண்டு மாடுகளை ரம்யா பாண்டியன் மற்றும் மிதுன் மாணிக்கம் செல்லப் பிள்ளைகளாக நினைத்து வளர்த்து வருகின்றனர். ஒரு கட்டத்தில் அரசியல்வாதிகளின் வன்மத்தால் மாடுகள் திடீரென களவாட படுகிறது. தொலைந்துபோன மாடுகளை காணாமல் பரிதவிக்கும் ரம்யா பாண்டியன் மற்றும் மிதுன் மாணிக்கம் அதைத் தேடி திரிகையில் ரிப்போர்ட்டராக வரும் வாணிபோஜன் அவர்களுக்கு உதவுகிறார்.

    கோடாங்கி

    கோடாங்கி

    மிக எளிமையான கதை களம் கிராமத்து மண் வாசனையுடன் இதுவரை தமிழ் சினிமா கண்டிராத வகையில் மாடுகளை மையப்படுத்திய படமாக இப்படம் உருவாகி இருக்க அனைத்து கதாபாத்திரங்களும் தனிச்சிறப்பை பெற்றுள்ளது. குறிப்பாக இதில் கோடாங்கியாக வரும் வடிவேலுவின் கதாபாத்திரம் ரசிகர்களால் வெகுவாக ஈர்க்கப்பட்டு உள்ளது .

    காமெடி அட்டகாசம்

    காமெடி அட்டகாசம்

    படம் ஆரம்பிக்கும் போதே பழைய டிவிஎஸ் 50க்கு பூட்டு போட்டு வைப்பது, லிப்ட் கொடுத்து உதவுவதாகக் கூறி பைக்கை தள்ள வைப்பது என கோடாங்கியின் அட்டகாசம் ஆரம்ப காட்சியிலேயே தொடங்கி ரசிகர்களை ரசிக்க வைத்திருக்க படம் முழுவதும் மாட்டை கண்டுபிடிக்க பெரும் உதவியாகவும் பெரும்பான்மையான இடங்களில் ரசிகர்களை சிரிக்க வைக்க காமெடியும் செய்துள்ளார்.

    ரசிகர்களின் பாராட்டு

    ரசிகர்களின் பாராட்டு

    படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரைத் தொடர்ந்து வரும் கோடாங்கி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் வடிவேலு இப்பொழுது ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளார். கோடாங்கி வடிவேலு யூட்யூப் தளத்தில் பட விமர்சகராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    kodangi role in raman aandalum ravanan aandalum movie is much appreciated among Netisans
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X