கோடீஸ்வரி கௌசல்யா.. கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்றார்!

சென்னை : கோடீஸ்வரி கௌசல்யா நடிகர் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருடன் ராதிகா மற்றும் கௌசல்யா உறவினர்கள் உடன் இருந்தனர்.

கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கோடீஸ்வரி நிகழ்ச்சி தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் சாதனை படைத்துள்ளது. ஆண்கள் மட்டுமே தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியை முதல் முறையாக ஒரு பெண்ணாக தொகுத்து வழங்கினார் ராதிகா சரத்குமார்.

Kodeeswari colors tamil kousalya meet kamal haasan

இந்நிகழ்ச்சிக்கு பல தரப்பட்ட மக்களிடமிருந்து வரவேற்பு கிடைத்தது. இந்நிகழ்ச்சியில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்தால் ஒரு கோடி ரூபாயை பரிசாக வெல்லலாம். இதற்கு முன்பு தமிழில் இந்நிகழ்ச்சியை சூர்யா, அரவிந்த் சாமி மற்றும் பிரகாஷ் ராஜ் தொகுத்து வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட 15 கேள்விகளுக்கும் சரியான பதிலை கூறி கோடீஸ்வரி பட்டத்தை தட்டி சென்றார். மாற்று திறனாளி பெண்ணான கௌசல்யா கோடீஸ்வரி பட்டதை தட்டிச்சென்றார்.

எம்.பி.ஏ பட்டதாரியான கௌசல்யா மதுரையில் உள்ள மாவட்ட தலைமை நீதிமன்றத்தில் பணியாற்றி வருகிறார். இன்று திரையுலகில் உச்ச நட்சத்திரமான நடிகர் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருடன் ராதிகா மற்றும் கௌசல்யா உறவினர்கள் உடன் இருந்தனர்.
கமலை சந்தித்த கௌசல்யா நடிகர் ரஜினியை சந்திப்பாரா என்ற கேள்வி மீடியா வட்டாரத்தில் எழுந்து உள்ளது. சில மாதங்களுக்கு முன் மாற்று திறனாளி மாணவன் ஒருவனை ரஜினி சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது. அது போன்று கௌசல்யாவையும் அவர் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X