திறமைகளின் குவியலாக உருவெடுத்த கெளசல்யா.. ஒரு கோடி வென்று கோடீஸ்வரியானார்!
Recommended Video
சென்னை : கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்கி வரும் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் கௌசல்யா என்ற மாற்றுத்திறனாளி பெண் 1 கோடியை வென்றுள்ளார்.
பிரபல ரீயாலிட்டி ஷோவான குரோர்பதி நிகழ்ச்சி பல வருடங்களாக இந்தியில் நடந்து வருகிறது இதனை பாலிவுட் புகழ் அமிதாப்பச்சன் தொகுத்து வழங்கி வருகிறார்.

தமிழில் கடந்த சில வருடங்களாக இந்த ஷோ இல்லாமல் இருந்தது. தற்போது அதனை ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்கி வருகிறார். இதில் 31 வயதான மதுரையை சேர்ந்த கெளசல்யா என்ற பெண் ஒரு கோடியை வென்று சாதனை படைத்துள்ளார். கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் சரியான பதிலை கூறி கோடீஸ்வரி என்ற படத்தை பெற்றுள்ளார். இவர், ஒரு மாற்று திறனாளி ஆவார்.
இந்நிகழ்ச்சி பல பெண்களின் வாழ்க்கையில் விளக்கை ஏற்றுகிறது. மதுரையில் வாழும் இவர் பல இன்னல்களை சந்தித்து வருகிறார். இவர் பல தடைகளை தாண்டி வாழ்க்கையில் முன்னேறி வருகிறார்.
வெற்றி பெற்ற கௌசல்யா பேசுகையில், நான், என் குடும்பத்தினரை சார்ந்தே இருக்கிறேன். சிறு வயதில் பல கஷ்டங்களை சந்தித்து உள்ளேன். நான் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சிக்கு மிக்க நன்றி தெரிவித்து கொள்கிறேன், எனக்கு இது போன்ற வாய்ப்பை வழங்கி, நான் வெற்றி பெற்றதற்கு அவர்களே முக்கிய காரணம் என்றும் தெரிவித்தார்.

கௌசல்யா தனது படிப்பில் பல சாதனைகளை புரிந்ததுள்ளார். யுனிவர் சிட்டியின் டாப்பர், பி.எஸ்சி மற்றும் எம்.எஸ்.சி.எம். பி ஏ போன்ற படிப்புகளை பயின்று உள்ளார். தற்போது மதுரையில் உள்ள மாவட்ட தலைமை நீதிமன்றத்தில் பணியாற்றி வருகிறார்.
செல்லும் பாதை சரியாக இருந்தால் வேகமாக அல்ல மெதுவாக ஓடினாலும் வெற்றி தான். இது போல தான் கௌசல்யா இவரை பார்த்து மற்றவர்களும் கற்று கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications











