கொடிவீரன்.... பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் எப்படி?

By Shankar

Recommended Video

கொடிவீரன் படம் எப்படி, பார்க்கலாமா?- வீடியோ

தீபாவளிக்கு வந்து வசூல் வேட்டை நடத்த திட்டமிடப்பட்ட கொடிவீரன் பல்வேறு தடைகளை கடந்து கொடி நாள் அனுஷ்டிக்கப்படும் டிசம்பர் 7 அன்று ரீலீஸ் ஆனது.

அவுட்ரேட் முறையில் ரூ 12 கோடிக்கு விற்பனை செய்யப்பட்ட கொடிவீரன் தாமதமாக, காலங்கடந்து சாதாரண நாளில் ரீலீஸ் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதால் வியாபார முறை மாற்றம் கண்டது. 12 கோடி நிச்சயமான வருமானம் இல்லை என்றாகி விநியோக முறையில் வியாபாரம் முடிவு செய்யப்பட்ட கொடிவீரன் தமிழகத்தில் முதல் காட்சியிலேயே தடுமாறியது சசிக்குமார் அன் கோவிற்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும்.

Kodiveeran Box Office collection

இந்த வாரம் நிவின் பாலி நடித்துள்ள ரிச்சி படத்தை தவிர வேறு படங்கள் கொடிவீரனுக்கு போட்டியில்லை. என்றாலும் தியேட்டர்களில் சசிக்குமார் படங்களுக்கு வழக்கமாக இருக்கும் ஓபனிங் இப்படத்திற்கு இல்லை.

தொடர் தோல்வி, உயிர் இழப்புகளை சந்தித்து வெளியான கொடிவீரன் கல்லா கட்டும் என்கிற கனவு கண்ட சசிக்குமாரை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது, கொடிவீரன் முதல் நாள் வசூல்.

தீபாவளிக்கு வந்திருந்தால் முதல் நாள் நான்கு கோடி வசூல் ஆகியிருக்கும். தற்போது முதல் நாள் வசூல் 1கோடி 68 லட்சத்தை எட்ட வே தடுமாறி விட்டது. இரண்டாம் நாள்வசூல் இதைவிட குறைந்தது.

Kodiveeran Box Office collection

சசிக்குமார் ஏற்கெனவே நடித்துள்ள சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, முத்தையா இயக்கியுள்ள மருது, குட்டிப்புலி படங்களின் மறு பதிப்புதான் இந்த கொடிவீரன்.

பழைய படங்களில் சில காட்சிகளை பாதிப்பாக கொண்டு கதை தயார் செய்து படமெடுப்பார்கள். முத்தையா தான் எடுத்த படங்களின் கதையில் உறவு முறைகளை மாற்றி சசிக்குமாரை நாயகனாக இந்தப் படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்.

நல்ல திரைக்கதையில் நல்ல நடிகன் நடித்தால் மக்கள் பார்ப்பார்கள். "கொடிவீரன் படத்தில் குடும்பங்களை வசீகரிக்கும் சசிக்குமார் இருக்கிறார் கதை இல்லையே... அப்புறம் எப்படி படம் கல்லா கட்டும்," என்கிறார்கள் தியேட்டர்காரர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X