பட்டய கிளப்பும் கோடியில் ஒருவன் முதல் சிங்கிள் டிராக் பாடல்...உற்சாகத்தில் படக்குழு
சென்னை : ஆனந்த் கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆன்டனி, ஆத்மிகா நடித்துள்ள படம் கோடியில் ஒருவன். இப்படத்தை செந்தூர் ஃலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது.

நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ள கோடியில் ஒருவன் படம் வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் சிங்கிள் டிராக் பாடலை மார்ச் 5 ம் தேதி, படக்குழு வெளியிட்டது.
அவன் பாத்து சிரிக்கல என துவங்கும் அந்த லிரிக் வீடியோ ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்து வருகிறது. யூட்யூப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த பாடல் இதுவரை மூன்றரை லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.
ஆத்மிகாவின் அழகிய நடிப்பில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த பாடலை 6000 க்கும் அதிகமானவர்கள் லைக் செய்துள்ளனர். சிங்கிள் டிராக் லிரிக் பாடலே இந்த அளவிற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளதால் படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











