விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் எப்போ ரிலீஸ் தெரியுமா?

சென்னை : விஜய் ஆண்டனி நடித்துள்ள கோடியில் ஒருவன் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

விஜய் ஆண்டனி, ஆத்மிகா, ராமச்சந்திர ராஜூ, பிரபாகர், கே.ஜி.எஃப் கருடா ராமச்சந்திர ராஜூ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இன்று மாலை படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்திருந்த நிலையில், மே14ந் தேதி திரைப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

கோடியில் ஒருவன்

கோடியில் ஒருவன்

இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் கோடியில் ஒருவன். இவருக்கு ஜோடியாக ஆத்மீகா நடித்துள்ளார். இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் வழங்க தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு உதய குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

ரசிகர்களிடைய வரவேற்பு

ரசிகர்களிடைய வரவேற்பு

இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்களுக்கு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஒரு டியூஷன் மாஸ்டராக நடித்துள்ளார். அதிரடி ஆக்ஷன் அதிரடி நிறைந்த இந்த படத்தில் கே.ஜி.எஃப் பட புகழ் கருடா ராமசந்திர ராஜு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மே14ந் தேதி ரிலீஸ்

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு இன்று அறிவித்துள்ளது. அதாவது மே மாதம் 14ந் தேதி இப்படம் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது படக்குழு. இதனால் விஜய்ஆண்டனி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

த்ரில்லர் மூவியில்

த்ரில்லர் மூவியில்

விஜய் ஆண்டனி தற்போது பிச்சைக்காரன் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை கோடியில் ஒருவன் பட இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்க உள்ளார். மேலும், தமிழ்படம் புகழ் சி.எஸ் அமுதன் இயக்கத்தில் த்ரில்லர் படத்தில் விஜய் ஆண்டனி நடிக்க உள்ளார் இதற்காக அறிவிப்பு நேற்று வெளியானது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X