கோடியில் ஒருவன் "ஸ்லம் ஆந்தம்" பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சென்னை : விஜய் ஆண்டனி ட்யூசன் மாஸ்டராக நடித்திருக்கும் திரைப்படம் கோடியில் ஒருவன்.
ஆள்,மெட்ரோ உள்ளிட்ட சூப்பர்ஹிட் படங்களை இயக்கிய ஆனந்தகிருஷ்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆத்மிகா இதில் நடித்திருக்க இப்படத்தின் "ஸ்லம் ஆந்தம்" என்ற குத்துப் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கில் மிகப் பெரிய மார்க்கெட்
தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து தனது அலட்டிக் கொள்ளாத நடிப்பின் மூலம் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருபவர் விஜய் ஆண்டனி. இசையமைப்பாளராக இருந்து இப்போது ஹீரோவாக பல படங்களில் நடித்து வரும் இவரின் பிச்சைக்காரன் தமிழைப் போலவே தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து இவரது படங்களுக்கு தெலுங்கு திரைப்படத்துறையிலும் மிகப் பெரிய மார்க்கெட் உள்ளது.

டியூஷன் மாஸ்டராக
இந்த நிலையில் மெட்ரோ பட இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் கோடியில் ஒருவன் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார். ஐ ஏ எஸ் ஆபிஸராகவும் ஹவுசிங் போர்டில் உள்ள குழந்தைகளுக்கு டியூஷன் மாஸ்டராகவும் இதில் நடித்துள்ளார். சென்னையில் கண்ணகிபுரம் சுற்றியுள்ள பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

ரிலீஸ் தேதி தள்ளி
கடந்த மே மாதம் 14ம் தேதியே திரையரங்குகளில் வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது ஆனால் கேப் விடாமல் போடப்பட்ட ஊரடங்கு காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது மறுதேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் கோடியில் ஒருவன் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி இணையதளத்தில் பட்டையை கிளப்பியது. விஜய் ஆண்டனி பக்கா ஆக்ஷன் ஹீரோவாக மாறி வெளுத்து கட்டியுள்ளார். ரொமான்ஸில் ஆத்மிகா உடன் புகுந்து விளையாடியுள்ளார்.

இன்று மாலை 5 மணிக்கு
ஏற்கனவே கோடியில் ஒருவன் படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் 3வது பாடல் "ஸ்லம் ஆந்தம்" என்ற குத்துப் பாடல் இன்று மாலை 5 மணிக்கு ரிலீஸ் என்ற அறிவிப்பை விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications