விஜய் ஆண்டனியின் “கோடியில் ஒருவன்“… 3 நிமிட வீடியோவே சும்மா அமர்க்களமா இருக்கே!

சென்னை : விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் திரைப்படத்தின் ஸ்னிக்பிக் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

Recommended Video

இந்த படத்துக்கு நான்தான் எடிட்டர் | Vijay Antony & Aathmika Exclusive|Kodiyil oruvan|Filmibeat Tamil

விஜய் ஆண்டனி, ஆத்மிகா, ராமச்சந்திர ராஜூ, பிரபாகர், கே.ஜி.எஃப் கருடா ராமச்சந்திர ராஜூ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகியிருக்கும் இந்த படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

கோடியில் ஒருவன்

கோடியில் ஒருவன்

இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் கோடியில் ஒருவன். இவருக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார். இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் வழங்க தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார்.

ஸ்னீக்பீக் வீடியோ

ஸ்னீக்பீக் வீடியோ

நாளை திரையரங்கில் வெளியாக உள்ள இப்படத்திலிருந்து 3 நிமிடம் ஓடக்கூடிய ஸ்னீக்பீக் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் விஜய் ஆண்டனியை வழிமறித்து வீண் வம்புக்கு இழுக்கின்றனர் ரவுடிகள். அவர்களிடம் விஜய் ஆண்டனி அமைதியாக பேசுகிறார். ஆனால், ரவுடிகள் இவரை கண்டமேனிக்கு அடித்துவிடுகிறார்கள். அப்போதும் விஜய் ஆண்டனி அமைதியாகவே இருக்கிறார்.

தடை தாண்டி போகணும்

தடை தாண்டி போகணும்

இந்த சண்டையை பார்த்துக்கொண்டு இருந்த மாணவர்கள், சார் உங்களுக்கு கோபமே வராதா என்று கேட்டபோது நாம் ஒரு இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது பல்வேறு தடைகள் வரும், அந்த தடைகளை பொருட்படுத்தாமல் நாம் இலக்கை நோக்கி போய்கிட்டே இருக்கனும் அப்படி போனாத்தான் இலக்கை அடையமுடியும், காமாரீஷ் மாதிரி... எத்தனைத் தடைகள் வந்தாலும் இலக்கை நோக்கி போய்கிட்டே இருக்கனும் என்று மாணவர்களுக்கு விஜய் ஆண்டனி அட்வைஸ் தருகிறார்.வெளியாகி உள்ள இந்த 3 நிமிட வீடியோ இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

பாடல்கள்

பாடல்கள்

இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல் இதற்கு முன்பே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஒரு டியூஷன் மாஸ்டராக நடித்துள்ளார். அதிரடி ஆக்ஷன் அதிரடி நிறைந்த இந்த படத்தில் கே.ஜி.எஃப் பட புகழ் கருடா ராமசந்திர ராஜு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகியிருக்கும் இந்த படம் திரையரங்குகளில் நாளை வெளியாக உள்ளது.

பிச்சைக்காரன்2

பிச்சைக்காரன்2

பிச்சைக்காரன் 2 படத்தை விஜய் ஆண்டனி இயக்க உள்ளார். இப்படத்தின் மூலம் விஜய் ஆண்டனி இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்தை விஜய் ஆண்டனி இயக்குவதோடு மட்டுமல்லாமல் நடிப்பு, இசை, படத்தொகுப்பு, தயாரிப்பு உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்கிறார். இதையடுத்து பிச்சைக்காரன் 2, படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் பூஜையுடன் தொடங்கியது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X