வெளியானது கோடியில் ஒருவன் படத்தின் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த ட்ரைலர்!
சென்னை: இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் கோடியில் ஒருவன்.
இந்த படத்தை மெட்ரோ, ஆள் படங்களை இயக்கிய ஆனந்த் கிருஷ்ணன் இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆத்மீகா நடித்துள்ளார்.
நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார், டிடி. .ராஜா, டி.ஆர். சஞ்சய் குமார் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

முதல் முறையாக
இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி இந்த படத்தில் முழுவதுமாக எடிட்டிங் வேலைகளையும் செய்துள்ளார். இதற்கு முன் திமிரு பிடிச்சவன் படத்தில் சில காட்சிகளை எடிட் செய்திருந்தார், முதல் முறையாக படம் முழுவதையும் எடிட் செய்துள்ளார் விஜய் ஆண்டனி.

14வது திரைப்படம்
கோடியில் ஒருவன் விஜய் ஆண்டனிக்கு 14வது திரைப்படமாகும். இது தவிர்த்து தமிழரசன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அக்னி சிறகுகள் & காக்கி படங்களில் நடித்து வருகிறார். இது மட்டுமன்றி பிச்சைக்காரன் 2ம் பாகத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் விஜய் ஆண்டனி.

இரண்டு மொழிகளில்
இந்த படமானது தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளிவரவுள்ளது. விஜய் ஆண்டனியின் நடிப்பில் இதுவரையில் அதிக பட்ஜெட்டில் தயாரான படம் இதுவே ஆகும். எனவே இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் சற்று அதிகமாகவே காணப்படுகிறது.

அதிரடி காட்சிகள்
படத்தின் டீசர், பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து கோடியில் ஒருவன் ட்ரைலர் நேற்று வெளியானது. நடிகர் சிவகார்த்திகேயன் ட்ரைலரை ட்விட்டரில் வெளியிட்டார். ட்ரைலரில் அதிரடி சண்டைக் காட்சிகள் மற்றும் வசனங்கள் இடம்பெற்றுள்ளது. யூடியூபில் 1 லட்சம் வியூவ்ஸ்களை கடந்து வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











