எறும்பு ஊற கல்லும் தேயும்: கோஹ்லி விஷயத்தில் உண்மையாகிடுச்சு!

By Siva

மும்பை: கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லிக்கும், அவரது காதலியான நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் வரும் டிசம்பர் மாதம் திருமணம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள். கோஹ்லி அனுஷ்காவை திருமணம் செய்ய விரும்புகிறார்.

இந்நிலையில் இது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

திருமணம்

திருமணம்

கோஹ்லியும், அனுஷ்காவும் வரும் டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்களாம். தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லையாம்.

அனுஷ்கா

அனுஷ்கா

டிசம்பரில் கண்டிப்பாக திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது. டிசம்பர் மாதம் இந்தியா, இலங்கை கிரிக்கெட் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டியில் தன்னால் கலந்து கொள்ள முடியாது என்று கோஹ்லி உயர் அதிகாரிகளிடம் ஏற்கனவே தெரிவித்துவிட்டாராம்.

போட்டி

போட்டி

திருமணத்தை மனதில் வைத்து தான் டிசம்பர் மாதம் நடக்கும் போட்டியில் தன்னால் கலந்து கொள்ள முடியாது என்று கோஹ்லி கூறியிருக்கிறார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரிவு

பிரிவு

முன்னதாக கடந்த ஆண்டே அனுஷ்காவை திருமணம் செய்ய விரும்பினார் கோஹ்லி. அனுஷ்காவோ எனக்கு கெரியர் தான் முக்கியம் என்று சொல்ல இருவரும் பிரிந்தனர்.

தூது

தூது

அனுஷ்காவை பிரிந்த கோஹ்லி பின்னர் மனம் மாறி பெரு முயற்சி செய்து அவருடன் மீண்டும் சேர்ந்தார். அனுஷ்காவின் சகோதரரை அணுகி தூது விட்டு காதலை புதுப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X