ரூ.34 கோடி அபார்ட்மென்ட்டில் கோஹ்லி, அனுஷ்காவுடன் வசிக்கப் போகும் ப்ரூனோ, டூட்
மும்பை: விராட் கோஹ்லி, அனுஷ்காவுடன் 2 பேர் சேர்ந்து வசிக்கப் போகிறார்களாம்.
கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த 11ம் தேதி இத்தாலியில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு மும்பையில் வசிக்க முடிவு செய்துள்ளனர்.

மும்பை
அனுஷ்கா ஏற்கனவே மும்பையில் தான் வசிக்கிறார். கோஹ்லி தனது மனைவிக்காக டெல்லியில் இருந்து மும்பைக்கு ஜாகையை மாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

35வது மாடி
மும்பை வோர்லி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 35வது மாடியில் கோஹ்லி-அனுஷ்கா வசிக்க உள்ளார்கள். அவர்கள் இன்னும் அந்த வீட்டில் குடியேறவில்லையாம்.

கோஹ்லி
கோஹ்லி-அனுஷ்கா குடியேறப் போகும் அபார்ட்மென்ட்டின் மதிப்பு ரூ. 34 கோடி ஆகும். அந்த அபார்ட்மென்ட்டில் அவர்களுடன் சேர்ந்து மேலும் 2 பேர் வசிக்க உள்ளனர்.

டூட்
கோஹ்லி-அனுஷ்காவுடன் ப்ரூனோ, டூட் ஆகியோரும் வசிக்கப் போகிறார்கள். ப்ரூனோ கோஹ்லி வளர்க்கும் நாய். டூட் அனுஷ்காவின் செல்ல நாய் ஆகும்.


Click it and Unblock the Notifications











