மும்பையில் கோஹ்லி-அனுஷ்கா ரிசப்ஷன்: சச்சின் வந்தாக, ஏஆர்ஆர் வந்தாக, தல வந்தாக இன்னும்...

By Siva

Recommended Video

கோலியை வாழ்த்த சென்ற தோனி, சச்சின், ஏ.ஆர்.ரகுமான்- வீடியோ

மும்பை: விராட் கோஹ்லி, அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சி மும்பையில் நேற்று மாலை நடந்தது.

கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து கடந்த 22ம் தேதி டெல்லியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

இதைத் தொடர்ந்து நேற்று மும்பையிலும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

வாழ்த்து

வாழ்த்து

மும்பை நிகழ்ச்சிக்கு கோஹ்லி முன்னாள் கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கருக்கு தான் முதல் பத்திரிகை வைத்தார். அழைப்பை ஏற்று சச்சின் தனது குடும்பத்தாருடன் வந்து மணமக்களை வாழ்த்தினார்.

ஜிவா

ஜிவா

தல டோணி தனது மனைவி சாக்ஷி, செல்ல மகள் ஜிவாவுடன் கோஹ்லியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஜிவா தனது தாயை போன்றே ரோஸ் கலரில் உடை அணிந்திருந்தார்.

மனைவி

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தனது மனைவியுடன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

அமிதாப்

அமிதாப்

அமிதாப் பச்சன் தனது மகள் ஸ்வேதா நந்தா, மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராயுடன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அனுஷ்கா

அனுஷ்கா

அனுஷ்காவுடன் சேர்ந்து நடித்த ரன்பிர் கபூர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அழைப்பு

அழைப்பு

திருமண வரவேற்புக்கு அனுஷ்கா சர்மா தனக்கு பிடித்த ஹீரோவான ஷாருக்கானுக்கு தான் முதல் பத்திரிகை வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாதுரி

மாதுரி

பாலிவுட் நடிகைகள் ரேகா, மாதுரி தீக்சித், கங்கனா ரனாவத் புடவையில் அழகாக வந்திருந்தனர்.

சித்தார்த்

சித்தார்த்

பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார், நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா, நடிகர் சயிப் அலி கானின் மகள் சாரா, மகன் இப்ராஹிம் ஆகியோர் கோஹ்லி ஃபங்ஷனில் கலந்து கொண்டனர்.

சகாரிகா

சகாரிகா

அண்மையில் திருமணம் செய்து கொண்ட கிரிக்கெட் வீரர் ஜகீர் கான் தனது மனைவி சகாரிகா கட்கேவுடன் வந்திருந்தார்.

பஜ்ஜி

பஜ்ஜி

கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் நிகழ்ச்சியில் உரையாடியபோது எடுத்த புகைப்படம். யுவராஜ் வசிக்கும் அதே அடுக்குமாடி குடியிருப்பில் தான் கோஹ்லியும் வசிக்கப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X