Don't Miss!
- News கரன்ட் இல்லாத நேரங்களிலும் இயங்குவதுதான் இன்வெர்ட்டர் ஏசியா?
- Sports வன்மத்தை கக்கிட்டாரு.. தோனியை வம்புக்கு இழுத்த கவுதம் கம்பீர்.. கொந்தளிக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்!
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- Finance டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ-வுக்கு நேரம் சரியில்லை.. ஐடி ஊழியர்களே உஷார்..!
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Technology புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
விஜய், சூர்யா ரசிகர்கள் அப்டி ஓரமா நில்லுங்க... கெத்தாக சாதனை படைத்த கோஹ்லி - அனுஷ்கா!
Recommended Video
சென்னை : சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் சாதனையை விராட் கோஹ்லி - அனுஷ்கா சர்மாவின் திருமணம் முறியடித்திருக்கிறது.
இது என்ன, மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுறீங்க..? எனக் கேட்கிறீர்களா? 'ஆமாங்க, உங்களுக்கு மொட்டைத் தலை புரிஞ்சா மொட்டைத்தலை... முழங்கால் புரிஞ்சா முழங்கால்'.
அனுஷ்கா சர்மாவுடனான திருமணத்தைப் பற்றி விராட் கோஹ்லி பதிவிட்ட ட்வீட் இதுவரை 85 ஆயிரம் ரீ-ட்வீட்களை கடந்து சாதனை படைத்திருக்கிறது.
|
மெர்சல்
விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மெகா ஹிட் ஆன படம் 'மெர்சல்'. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தான் இந்தியாவிலேயே அதிகம் பேர் ரீ-ட்வீட் செய்த ட்வீட்டாக இருந்தது. இந்த ட்வீட்டை 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் RT செய்துள்ளனர்.
|
தானா சேர்ந்த கூட்டம்
'மெர்சல்' ஃபர்ஸ்ட் லுக் ட்வீட்டை சூர்யா நடித்திருக்கும் 'தானா சேர்ந்த கூட்டம்' செகண்ட் லுக் முறியடித்து தற்போது வரை 75 ஆயிரம் RT ஆகியுள்ளது. வருடம் முடியும் தருவாயில் இவை தான் இந்தியாவிலேயே அதிகம் RT ஆன ட்வீட்களாக இருந்தன.
ரசிகர்கள் கொண்டாட்டம்
மெர்சல் ட்வீட் சாதனை படைத்ததை விஜய் ரசிகர்கள் செமயாக கொண்டாடினர். சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' மெர்சல் படத்தின் சாதனையை முறியடித்ததை தொடர்ந்து சூர்யா ரசிகர்கள் ட்விட்டரில் ஹேஸ்டேக் உருவாக்கி தெறிக்க விட்டனர். இந்தச் சாதனையை அசால்ட்டாக தகர்த்துள்ளார் கோஹ்லி.
|
கோல்டன் ட்வீட் 2017
தற்போது தனக்கும் அனுஷ்கா ஷர்மாவிற்கும் நடந்த திருமணம் குறித்து நேற்று முன்தினம் விராட் கோஹ்லி ட்வீட் செய்தார். அந்த ட்வீட் தாறுமாறாக ரீ-ட்வீட் ஆகி தற்போது வரை 85 ஆயிரம் RT ஆகியிருக்கிறது. 'தானா சேர்ந்த கூட்டம்' சாதனையை வருட இறுதியில் அசால்ட்டாக முறியடித்துவிட்டார் கோஹ்லி.
|
கோல்டன் ட்வீட் 2016
விருஷ்கா ட்வீட் மூலம் அதிக ரீ-ட்வீட்களைப் பெற்று இந்த வருடத்தின் கோல்டன் ட்வீட் சாதனையைப் பெற்றிருக்கிறார் கோஹ்லி. கடந்த வருடமும், கோஹ்லியே கோல்டன் ட்வீட் சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் அனுஷ்கா சர்மாவைப் பற்றிய ட்வீட் தான்.