»   »  மாஜி காதலர் ரன்வீருக்கு லிப் டூ லிப் கொடுத்த அனுஷ்கா: கொலவெறியில் கோஹ்லி

மாஜி காதலர் ரன்வீருக்கு லிப் டூ லிப் கொடுத்த அனுஷ்கா: கொலவெறியில் கோஹ்லி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தில் தடக்னே தோ படத்தில் அனுஷ்கா சர்மா தனது முன்னாள் காதலர் ரன்வீர் சிங்குடன் சேர்ந்து லிப் டூ லிப் காட்சியில் நடித்தது அவரின் தற்போதைய காதலர் விராட் கோஹ்லியை கோபம் அடைய வைத்துள்ளது என்று கூறப்படுகிறது.

பாலிவுட் நடிகைகள் அனுஷ்கா சர்மா, பிரியங்கா சோப்ரா, நடிகர்கள் பர்ஹான் அக்தர், ரன்வீர் சிங் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தி படம் தில் தடக்னே தோ. படம் வரும் 5ம் தேதி ரிலீஸாக உள்ளது. படத்தில் கப்பலில் செல்கையில் அனுஷ்காவும், ரன்வீரும் காதலில் விழுவார்களாம்.

படத்தில் காதலர்களாக வரும் அவர்கள் நிஜத்தில் ஒரு காலத்தில் காதலர்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ரன்வீர்

ரன்வீர்

செக்ஸ் இல்லாமல் என்னால் இருக்க முடியாது என்று கூறிய ரன்வீர் சிங்கும், அனுஷ்காவும் ஒரு காலத்தில் காதல் ஜோடியாக வலம் வந்தனர். அதற்கு பிறகு பிரிந்த அவர்கள் ஆளுக்கு ஒரு ஆளை காதலித்து வருகிறார்கள். அதாவது ரன்வீர் தீபிகா படுகோனைவையும், அனுஷ்கா கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியையும் காதலிக்கிறார்கள்.

முத்தம்

முத்தம்

தில் தடக்னே தோ படத்தில் முன்னாள் காதலர்கள் ரீல் காதலர்களாக நடித்துள்ளனர். இந்நிலையில் படத்தில் அவர்கள் இருவரும் உதட்டோடு உதடு வைத்து ஆழமான முத்தம் கொடுக்கும் காட்சி உள்ளதாம். இது தவிர மேலும் சில நெருக்கமான காட்சிகளும் உள்ளதாம்.

கோஹ்லி

கோஹ்லி

தில் தடக்னே தோ படத்தில் குட்டி, குட்டியாக ஆடை அணிந்து போட்டோ எடுத்ததற்கே கோஹ்லி அனுஷ்கா மீது கோபம் அடைந்தார். இந்நிலையில் முன்னாள் காதல் ஜோடி நச்சென்று இச்சு கொடுத்ததால் அவர் மேலும் கோபம் அடைந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

ரன்பீர் கபூர்

ரன்பீர் கபூர்

முன்னதாக பாம்பே வெல்வெட் படத்தில் அனுஷ்கா சர்மா உதட்டில் முத்தம் கொடுத்தார் ரன்பீர் கபூர். அவர்களின் முத்தக் காட்சியை பார்த்த கோஹ்லி அதை கண்டுகொள்ளவில்லையாம்.

காதல்

காதல்

அனுஷ்கா சர்மாவை காதலிப்பதாக கோஹ்லி தான் ஒப்புக் கொண்டுள்ளார். அனுஷ்காவிடம் காதல் பற்றி கேட்டாலே நைசாக நழுவி விடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Buzz is that cricketer Kohli is angry with his girlfriend Anushka Sharma for locking lips with her former lover Ranveer Singh in Dil Dhadakne Do.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil