பிகினி போட்டோ வெளியிட்ட அனுஷ்கா: கணவர் கோஹ்லியின் கமெண்ட்டை பார்த்தீங்களா?
மும்பை:மனைவி பிகினி புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டதை பார்த்த விராட் கோஹ்லி முதல் ஆளாக கமெண்ட் போட்டுள்ளார்.
பாலிவுட் நடிகைகள் பிகினி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில் நடிகை அனுஷ்கா சர்மாவும் தனது பிகினி புகைப்படத்தை வெளியிட்டார்.

அனுஷ்காவின் பிகினி புகைப்படம் ஆபாசமாக இல்லை. அதை பார்த்த ரசிகர்கள் கியூட், அழகு, புதுப்படங்களில் எப்பொழுது நடிப்பீர்கள் என்று கேட்டுள்ளனர். கணவரும், கிரிக்கெட் வீரருமான விராட் கோஹ்லியோ இதய வடிவில் இருக்கும் எமோஜியை போட்டுள்ளார்.
அனுஷ்கா ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ஷாருக்கானுடன் சேர்ந்து நடித்த ஜீரோ படத்திற்கு பிறகு புதுப்படங்கள் எதிலும் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை. இதை பார்த்தவர்கள் அவ்வளவு தான், அனுஷ்காவின் மார்க்கெட் போய்விட்டது, கெரியர் படுத்துவிட்டது என்றார்கள்.
தன்னை பற்றி பலரும் பலவிதமாக விமர்சிப்பதை அறிந்த அனுஷ்காவோ, ஒரு நடிகை என்றால் தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று இல்லை. நடிகைகளும் பிரேக் எடுக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
ஒரு வேளை அனுஷ்கா கர்ப்பமாக இருக்கிறாரோ, அதனால் தான் படங்களில் நடிக்கவில்லையோ என்ற பேச்சு எழாமல் இல்லை. நான் ஒன்றும் கர்ப்பமாக இல்லை, அப்படி ஏதாவது நடந்தால் நானே தெரிவிப்பேன் என்று அதற்கும் விளக்கம் அளித்துள்ளார் அனுஷ்கா.
அனுஷ்கா தற்போது பிரேக் எடுத்துள்ளதால் கணவருடன் நேரம் செலவிட்டுக் கொண்டிருக்கிறார். இருவரும் அவரவர் கெரியரில் பிசியாக இருந்தபோது நேரம் கிடைக்கும்போது தான் பார்த்துக் கொண்டனர். ஆனால் தற்போது அனுஷ்காவால் கோஹ்லியுடன் மாதக் கணக்கில் நேரம் செலவிட முடிகிறது.
முன்னதாக பேட்டி ஒன்றில் அனுஷ்கா கூறியதாவது,
நான் என் நண்பரை திருமணம் செய்துள்ளேன். நான் அவரை மிகவும் நேசிக்கிறேன். அவர் என்னை நன்கு புரிந்து வைத்துள்ளார். எங்களுக்கு இடையே நிறைய ஒற்றுமைகள் உள்ளன. அவரை திருமணம் செய்ததில் மிக்க மகிழ்ச்சி என்றார்.


Click it and Unblock the Notifications











