என் பொண்டாட்டி போல யாரு மச்சான்: அனுஷ்காவை புகழ்ந்த கோஹ்லி
Recommended Video

மும்பை: தனது மனைவி அனுஷ்காவை புகழ்ந்து தள்ளியுள்ளார் கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி.
கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்தபோதே நெட்டிசன்களுக்கு ஒரு கெட்டப் பழக்கம் ஏற்பட்டது. அதாவது அனுஷ்கா ஸ்டேடியத்திற்கு வந்து ஊக்குவித்தால் கோஹ்லி விளையாட மாட்டார் என்று நெட்டிசன்ஸ் நம்புகிறார்கள்.
கோஹ்லி சரியாக விளையாடாமல் சொதப்பினால் உடனே அனுஷ்காவை திட்டத் துவங்கிவிடுவார்கள் நெட்டிசன்ஸ்.

திருமணம்
கோஹ்லி அனுஷ்காவை திருமணம் செய்தபோது அய்யய்யோ இனி கோஹ்லி சரியா விளையாட மாட்டாரோ என்று சமூக வலைதளங்களில் கிளப்பிவிட்டனர்.

தென்னாப்பிரிக்கா
தென்னாப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணில் முதல் முறையாக வீழ்த்தி ஒரு நாள் தொடரை கோஹ்லி தலைமையிலான இந்திய அணி வென்றுள்ளது. கிரிக்கெட் வரலாற்றில் கோஹ்லி தலைமையிலான அணி புதிய வரலாறு படைத்துள்ளது.

புகழாரம்
தென்னாப்பிரிக்கா தொடரில் நான் சிறப்பாக விளையாட என் மனைவி அனுஷ்கா தான் காரணம். அவர் தான் எனக்கு தொடர்ந்து ஊக்கம் அளித்து வந்தார் என்று புகழ்ந்துள்ளார் கோஹ்லி.

ஊக்கம்
அனுஷ்கா தான் எனக்கு நம்பிக்கை அளித்தார். அதன் விளைவாக நாங்கள் வெற்றி அடைந்துள்ளோம் என்கிறார் கோஹ்லி. மனைவியை புகழ்ந்தது மட்டும் அல்ல அவரின் புதிய படத்தை சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தவும் கோஹ்லி தவறுவது இல்லை.


Click it and Unblock the Notifications











