ஆள் செம ஸ்டைலா இருக்காரே.. இந்த தீபாவளி தலைவர் தீபாவளி தான்.. தெறிக்கும் அண்ணாத்த கமெண்ட்ஸ்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இணையத்தை தெறிக்க விட்டுள்ளது.
Recommended Video
நடிகர் கார்த்தியின் சிறுத்தை படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமான சிவா தொடர்ந்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என அஜித் படங்களை இயக்கி வெற்றி கண்டார்.
இந்நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் கை கோர்த்துள்ளார். அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்த ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என்ன சொன்னாங்க என்பதை இங்கே பார்ப்போம்.

அட்ராசக்க அண்ணாத்த
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா நடித்த தர்பார் திரைப்படம் மிகப்பெரிய விளம்பரம் செய்யப்பட்டு வெளியான நிலையில், அந்த படம் பெரிதாக போகவில்லை. இந்நிலையில், அண்ணாத்த படம் மூலம் மீண்டும் ஒரு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தே தீர வேண்டும் என்கிற கட்டாயத்தில் நடிகர் ரஜினிகாந்தும், விஸ்வாசம் வெற்றியை போல இன்னொரு வெற்றியை ருசி பார்க்க வேண்டும் என்கிற வெறியில் சிறுத்தை சிவாவும் இந்த படத்தை உருவாக்கி உள்ளனர்.

கீர்த்தி சுரேஷ் ரியாக்ஷன்
ஆவலுடன் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த அண்ணாத்த ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி விட்டது. இனிமேலும், என்னால் பொறுமையாக இருக்க முடியாது. ஒரு அட்வெஞ்சரஸ் பயணத்தை எதிர்நோக்கி காத்திருங்கள் என அண்ணாத்த படம் குறித்த அசத்தல் அப்டேட்டையும் நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார். முதல் முறையாக ரஜினிகாந்த் உடன் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

ஸ்க்ரீனில் நெருப்பு பறக்கும்
ரஜினிகாந்த் எது செய்தாலும் அது ஸ்பெஷலாகவே இருக்கும் அது தான் நம்முடைய சூப்பர்ஸ்டாரின் ஸ்பெஷல் என நடிகர் சாந்தனு அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். மேலும், ஸ்க்ரீனில் நெருப்பு பறக்க விடப் போகிறார் நம்ம அண்ணாத்த ரஜினிகாந்த் என்றும் பாராட்டி உள்ளார்.

குஷ்பு போட்ட மாஸ் ட்வீட்
அண்ணாமலை, மன்னன் உள்ளிட்ட பல ரஜினி படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ள நடிகை குஷ்பு பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ளார். அண்ணாத்த ஃபர்ஸ்ட் லுக்கை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்த நடிகை குஷ்பு மாஸ், வெறித்தனம், அண்ணாத்த என ஹாஷ்டேக்குகளை போட்டு ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளார்.

தலைவர் பிளட்ஸ்
அண்ணாத்த படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் வெளியான அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த ஃபர்ஸ்ட் லுக்கை ஏராளமான ரஜினி ரசிகர்கள் ஒன்று கூடி தங்களது மொபைல் போன் டிபியாக மாற்றிய புகைப்படத்தை இணையத்தில் ஷேர் செய்து தலைவர் பிளட்ஸ் என கேப்ஷன் கொடுத்து வைரலாக்கி வருகின்றனர்.

ஆள் பார்க்கவே
அண்ணாத்த ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ள நிலையில் ஏகப்பட்ட ரசிகர்கள் பலவித கமெண்ட்டுகளையும் ரசிகர்கள் சண்டைகளையும் போட்டு வருகின்றனர். ஆனால், சூப்பர்ஸ்டார் ரசிகர்கள் "ஆள் பார்க்கவே செம ஸ்டைலா இருக்காரே" என மீம்ஸ் போட்டு கொண்டாடி வருகின்றனர்.

அவங்ககிட்ட சொல்லி வைங்க
"சார் அவங்ககிட்ட சொல்லி வைங்க இந்த தீபாவளி தலைவர் தீபாவளினு" தர்பார் படத்தில் ரஜினி பேசும் வசன புகைப்படத்தை ஷேர் செய்து வலிமை திரைப்படம் நிச்சயம் இந்த தீபாவளிக்கு அண்ணாத்த படத்துடன் மோதாது என அழுத்தமாக கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











