twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜனவரியில் நயன் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்: ஹேப்பியா கண்ணுகளா? #KolaiyuthirKaalam

    By Siva
    |

    சென்னை: கொலையுதிர் காலம் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

    சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் கொலையுதிர் காலம். ஹீரோயினை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம். ஃபர்ஸ்ட் லுக்கே மாஸாக இருந்தது.

    இந்நிலையில் இன்று செகண்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

    நயன்தாரா

    நயன்தாரா மூன்று வித முகபாவனைகள் கொடுத்திருப்பது போன்ற செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. போஸ்டரை பார்த்தாலே படத்தை உடனே பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. செகண்ட் லுக் வெளியாகியுள்ள நிலையில் #KolaiyuthirKaalam என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகியுள்ளது.

    ஜனவரி

    ஜனவரி

    கொலையுதிர் காலம் படம் ஜனவரி மாதம் ரிலீஸாக உள்ளது. ஜனவரி மாதம் ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் ஆகிய படங்களும் ரிலீஸாகின்றன. நயன்தாராவுக்கும் ஹீரோக்களுக்கு இணையான மார்க்கெட் இருப்பதால் படம் வெளியாவதில் பிரச்சனை இல்லை. அவர் படத்திற்கு என்று வசூல் நிச்சயம் வரும்.

    ரசிகர்கள்

    ரசிகர்கள்

    ஜனவரி மாதம் நயன்தாரா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட். அதாவது விஸ்வாசம், கொலையுதிர்காலம் என்று அடுத்தடுத்து இரண்டு நயன் படங்கள் ஒரே மாதத்தில் ரிலீஸாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஹிட்

    ஹிட்

    போஸ்டரை பார்த்தாலே நயன்தாரா மிகவும் அழுத்தமான பெண்ணாக நடித்திருக்கிறார் என்பது தெரிகிறது. நயன்தாராவின் முகம் கோலமாவு கோகிலாவையும் நினைவூட்டுகிறது. படம் நிச்சயம் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Second look poster of Nayanthara's Kolaiyuthir Kaalam has been released today. Nayanthara fans will have double treat in January.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X