கொலையுதிர் காலம் மே மாதம் ரிலீஸ்: அப்போ விக்னேஷ் சிவன் ஏன் அப்படி ட்வீட்டினார்?
Recommended Video

சென்னை: நயன்தாரா நடித்துள்ள கொலையுதிர் காலம் படம் அடுத்த மாதம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா, பூமிகா, பிரதாப் போத்தன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கொலையுதிர் காலம். படத்தின் டீஸர், ட்ரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
அந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தான் ராதாரவி நயன்தாராவை பற்றி தரக்குறைவாக பேசினார்.

கொலையுதிர் காலம்
கொலையுதிர் காலம் படத்தை சென்சாருக்கு அனுப்பப் போகிறோம். படம் மே மாதம் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் ரிலீஸாகும். சென்சார் வேலைகள் முடிந்த உடன் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று கொலையுதிர் காலம் தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்னேஷ் சிவன்
கொலையுதிர் காலம் முடிக்கப்படாத படம். அதற்கு போய் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவா என்று நயன்தாராவின் காதலரான விக்னேஷ் சிவன் ட்வீட் செய்திருந்தார். இந்நிலையில் பட ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

படம்
கொலையுதிர் காலம் முடிக்கப்படாத படம் என்கிறார் விக்னேஷ் சிவன். அப்படி இருக்கும்போது அதை எப்படி ரிலீஸ் செய்ய முடியும். படம் ரிலீஸுக்கு தயார் என்றால் விக்னேஷ் சிவன் ஏன் அப்படி ட்வீட் செய்தார். அவர் யார் படங்கள் குறித்தும் குறை சொல்ல மாட்டாரே. சொல்லப் போனால் மனதார வாழ்த்துவார், பாராட்டுவார்.

நயன்தாரா
எது எப்படியோ கொலையுதிர் காலம் படம் ரிலீஸாகப் போகிறது என்ற தகவல் அறிந்ததும் நயன்தாரா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காத்திருப்போம் தலைவி என்கிறார்கள். இந்த படம் நிச்சயம் நயன்தாராவுக்கு பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.


Click it and Unblock the Notifications











