Kolaiyuthir Kaalam: பிளாப்.. கொட்டாவிதான் வருது..நயனுக்கு இது போறாதகாலம்- கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

கொலையுதிர் காலம் படம் குறித்து ரசிகர்கள் டிவிட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர். பெரும்பாலான ரசிகர்கள் எதிர்மறையான கருத்துக்களையே தெரிவித்துள்ளனர்.

சென்னை: நயன்தாரா நடிப்பில வெளிவந்துள்ள கொலையுதிர் காலம் திரைப்படம் குறித்து ரசிகர்கள் டிவிட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்துள்ள படம் கொலையுதிர் காலம். கடந்த ஜனவரி மாதமே வெளியாகி இருக்க வேண்டிய இப்படம் பல்வேறு பிரச்சினைகளின் காரணமாக நேற்று தான் வெளியாகியுள்ளது.

'ஹஷ்' எனும் ஹாலிவுட் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் கொலையுதிர் காலம். கதைப்படி மர்ம நபர் ஒருவர் நயன்தாராவை கொலை செய்ய முயற்சிப்பார். அவரிடம் இருந்து நயன்தாரா எப்படி தப்பிக்கிறார் என்பது தான் படம்.

கொலையுதிர் காலம் படம் குறித்து ரசிகர்கள் டிவிட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் சிலவற்றை இப்போது பார்க்கலாம்.

பிளோ ஆவரேஜ் படம்

"மல்யுத்த வீரர் கேன் மாதிரியான ஒரு நபர், நயன்தாராவை இரண்டு மணி நேரம் துரத்திக்கொண்டு இருக்கிறார் என்றால் நம்பவா முடிகிறது. பிளோ ஆவரேஜ் படம். படம் முடியும் வரை உட்கார்ந்து இருப்பது சிரமம்", என ஒருவர் பதிவிட்டுள்ளார்.

நயன்தாராவுக்கு போறாத காலம்

"கொயுதிர் காலம் படத்தில் நடித்துள்ள நயன்தாராவுக்கு இது போறாத காலாம். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைக்கு இப்படி ஒரு சூழ்நிலையா?" என பரிதாபப்பட்டுள்ளார் இவர்.

பிளாப் படம்

கொலையுதிர் காலம் நிச்சயம் பிளாப் படம் என ஒற்றை வார்த்தையில் பதிவிட்டுள்ளார் இவர். அவர் சொல்வது போல் தான் பெரும்பான்மையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

கொட்டாவி தான் வருது

"நண்பர்களுடன் சேர்ந்து கொலையுதிர் காலம் படம் பார்த்தேன். எல்லோரும் பாதி படத்திலேயே எழுந்து போய்விட்டனர். இந்த வருடத்தின் சிறந்த போரிங் படம். கொட்டாவி தான் வருது. ஐந்துக்கு ஒரு மதிப்பெண் தான் கொடுக்க முடியும்", என கூறியுள்ளார் இவர்.

நயன்தாரா நடிப்பு சூப்பர்

"நயன்தாராவின் நடிப்பு சூப்பர். பின்னணி இசை பிரமாதமாக இருக்கிறது. ஒரளவுக்கு திரில்லிங்காக இருக்கிறது. மெதுவாக நகரும் முதல் பாதி படம் தான் பெரிய மைனஸ்", என குறிப்பிட்டுள்ளார் இவர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X